பியாஜியோ நிறுவனத்தின் 4-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் கொச்சியில் துவக்கம்

Written By:

பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் 4-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம், கொச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த டீலர்ஷிப், ஜேய் மோட்டார்ஸ் (Jey Motors) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

சுமார் 4,950 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மோட்டோப்ளக்ஸ் கொச்சி ஷோரூம், பை பாஸ் ரோட், படிவட்டம், கொச்சி என்ற முகவரியில் அமைந்துள்ளது.

piaggio-motoplex-kochi-fourth-indian-outlet-inaugurated-recently

இந்த மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் திறப்பு விழாவின் போது, பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சீஇஓ ஸ்டெஃபேனோ பெல்லே மற்றும் மோட்டோப்ளக்ஸ் கொச்சியின் சீஇஓ அதுல். ஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனம் வழங்கும் அனைத்து வாகனங்களும் இங்கு காட்சிபடுத்தபட்டுள்ளது.

மோட்டோப்ளக்ஸ் கொச்சி ஷோரூமில், அப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி மற்றும் வெஸ்பா மோட்டார்சைக்கிள் ரேஞ்ச் வாகனங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கபட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு புதுமைகள் நிறைந்த இன்-ஸ்டோர் அனுபவம் வழங்கப்படுகிறது.

piaggio-motoplex-kochi-fourth-indian-outlet-inaugurated-now

மோட்டோப்ளக்ஸ் கொச்சி ஷோரூம், பியாஜியோ வாகன உரிமையாளார்கள் மற்றும் ஆர்வலர்களுக்கும் வரமாக இருக்கும். இந்த ஒரு இடத்தில், வாடிக்கையாளர்கள் அனைத்து இத்தாலிய நிறுவன தயாரிப்புகளையும் காண முடியும்.

இந்தியாவில், முதல் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் பூனேவிலும், 2-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் ஹைத்ராபாத்-திலும், 3-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் சென்னையில் திறக்கபட்டுள்ளது. இவ்வாறாக, பியாஜியோ நிறுவனம் தென் இந்தியாவில் தங்களின் தடங்களை வேகமாக பதித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மோட்டோப்ளக்ஸ் இந்தியா ஸ்டார்கள், சர்வதேச சந்தைகளில் உள்ள மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்களுக்கு நிகராக உள்ளது.

English summary
Piaggio India has inaugurated its all-new, and its fourth Motoplex store in Kochi. This dealership is managed and organised by Jey Motors. Motoplex Kochi is spread across 4,950 sq. ft and is located on bypass road in Padivattom, Kochi. Stefano Pelle, Managing Director and CEO - Piaggio India and Athul J, CEO of Motoplex Kochi were present at inauguration of Motoplex Kochi...
Story first published: Wednesday, June 29, 2016, 7:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark