பியாஜியோவின் 2-வது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் ஹைதரபாத் நகரில் துவக்கம்

By Ravichandran

இந்தியாவில் பியாஜியோ நிறுவனத்தின் இரண்டாவது மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் ஹைதரபாத் நகரில் திறக்கபட்டுள்ளது.

இந்தியாவின் முதல் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம் பூனேவில் துவக்கபட்டது. ஹைதரபாத் நகரில் உள்ள மோட்டோப்ளக்ஸ் ஷோரூமை மெர்சஸ் ஷ்ரேய் ஆட்டோமோடிவ் (M/S Shrey Automotive) என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

piaggio-second-motoplex-showroom-opened-hyderabad-in-india

மோட்டோப்ளக்ஸ் ஹைதரபாத் ஷோரூம் திறப்பு விழாவின் போது, பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சீஇஓ ஸ்டெஃபேனோ பெல்லே, டோலிவுட் நட்சத்திரமான நாக சைத்தன்யா மற்றும் மோட்டோப்ளக்ஸ் ஹைதரபாத் ஷோரூமின் சீஇஓ சுஷீல் துக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

piaggio-second-motoplex-showroom-opened-at-hyderabad-india

இந்தியாவில் உள்ள மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்கள், சர்வதேச சந்தைகளில் உள்ளது போன்ற ஷோரூம்கள் ஆகும். இங்கு, அப்ரிலியா, மோட்டோ குஸ்ஸி மற்றும் வெஸ்பா மோட்டார்சைக்கிள் ரேஞ்ச் வாகனங்கள் காட்சிக்கும், விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. இந்த மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்களில், பியாஜியோ நிறுவனத்தின் லைஃப்ஸ்டைல் கலெக்‌ஷன்களும் வைக்கபட்டுள்ளது.

piaggio-second-motoplex-showroom-opened-at-hyderabad-in-india

ஹைதரபாத் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம், ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் சுமார் 4,134 சதுர அடி என்ற பரப்பளவில் பரவி உள்ளது. இந்த ஹைதரபாத் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம், 3எஸ் மையமாக இருக்கும். ஹைதரபாத் நகரில் உள்ள 2 சக்கர வாகன ஆர்வலர்களுக்கு மிக முக்கியமான மையமாக விளங்க உள்ளது. ஹைதரபாத் மோட்டோப்ளக்ஸ் ஷோரூமின் தோற்றம் மற்றும் டிசைன், ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மோட்டோப்ளக்ஸ் ஷோரூமை போலவே இருக்க்கிறது.

piaggio-second-motoplex-showroom-opened-in-hyderabad-in-india

இந்தியா முழுவதும் பரவலாக இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல்வேறு மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்கள் திறக்கபட உள்ளது. பிரிமியம் ஷோரூம்களாக இயங்கும் மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்களில், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் மூன்று முக்கிய பிராண்ட்களான மோட்டோ குஸ்ஸி மற்றும் வெஸ்பா மோட்டார்சைக்கிள் ரேஞ்ச் வாகனங்கள் விற்கபடுகிறது. விரைவில் வெளியாக உள்ள அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் இந்த மோட்டோப்ளக்ஸ் ஷோரூம்கள் மூலம் விற்கபட உள்ளது.

Most Read Articles

English summary
Piaggio India has opened its second Motoplex store in India in Hyderabad. Present during inauguration of Motoplex Hyderabad was Stefano Pelle, Managing Director and CEO of Piaggio India, Tollywood Actor, Naga Chaitanya etc. Aprilia, Moto Guzzi, and Vespa range of two-wheelers are sold here. Hyderabad Motoplex showroom is spread across 4,134 sq. ft. at Jubilee Hills...
Story first published: Friday, May 20, 2016, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X