புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

Written By:

புத்தாண்டில் மோட்டார்சைக்கிள் வாங்க இருப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பாரம்பரியத்தை பரைசாற்றும் மூன்று புதிய வண்ணங்களில் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் வந்துள்ளன. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் பிறப்பிடமான இங்கிலாந்து நாட்டிலுள்ள ரெட்டிச் என்ற பெயரை தாங்கி இந்த புதிய மாடல்களுடன் வந்துள்ளன.

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

1939ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு 2 ஸ்ட்ரோக் 125சிசி புரோட்டோடைப் மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்ட மோனோகிராம் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

மேலும், 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 346சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

சென்னையில் ரூ.1,47,831 ஆன்ரோடு விலையிலும், பெங்களூரில் ரூ.1,55,456 ஆன்ரோடு விலையிலும் கிடைக்கும். ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் பிரியர்களை இந்த புதிய மாடல் நிச்சயம் கவரும்.

புதிய வண்ணங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்!

நாளை முதல் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் மோட்டார்சைக்கிளுக்கு முன்பதிவு துவங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

English summary
Royal Enfield Classic 350 Redditch launched in India.
Story first published: Saturday, December 31, 2016, 9:39 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos