ராயல் என்ஃபீல்டு இமயமலை சாகச பயணம் துவங்கியது... முதல்முறையாக பெண்களும் பங்கேற்பு

By Meena

இந்தியாவின் பெருமைக்குரிய மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு சார்பில் ஆண்டுதோறும் ஹிமாலயன் ஒடிஸி என்ற பெயரில் தொலைதூர சாகச பைக் பயண நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

தில்லியிலிருந்து புறப்பட்டு காஷ்மீர் வழியே இமயமலைத் தொடரில் பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி இது. 12 ஆண்டுகள் இதுவரை ஹிமாலயன் ஒடிஸி நடைபெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு சாகச பயணம்

அனைத்து எடிசனுமே ஏகப்பட்ட வரவேற்பைப் பெற்றது. சுமார் 2,000 கிலோ மீட்டருக்கு மலைச் சிகரங்களுக்கு மத்தியில் கெத்தான ராயல் என்ஃபீல்டை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றால், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு அது எனர்ஜி டிரிங்க் குடிப்பது மாதிரி... ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு அடுத்தது என்ன? என்று கேட்பார்கள்.

உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்த ஹிமாலயன் ஒடிஸியில் இந்த ஆண்டு ஒரு புதுமையைப் புகுத்தி அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

முழுக்க முழுக்க பெண்கள் அடங்கிய இரு குழுக்கள் ஹிமாலயன் ஒடிஸியில் பங்கேற்கவுள்ளன. இரு குழுக்களிலும் சேர்த்து மொத்தமாக 20 பெண்கள் உள்ளனர். ரைடரைத் தவிர உடன் செல்லும் டெக்னீஷியன்கள், டாக்டர்கள், உதவியாளர்கள் ஆகியோரும் பெண்களே.

13-ஆவது ஆண்டின் முதல் முயற்சியாக இதை நடத்தப்போகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். மொத்தம் 2,500 கிலோ மீட்டரை 15 நாள்களில் கடக்கவுள்ளது பெண்கள் ஒடிஸி டீம். இரு குழுக்களும் காஷ்மீரின் லே பகுதியில் சந்தித்துக் கொள்ள உள்ளதாம்.

இந்த பயணத்தின் இடையே 3 மலைகளைக் கடக்க வேண்டும் என்பது த்ரில்லான அனுபவம். உலகின் மிக உயரமான கார்டங் - லா சாலையில் பெண்கள் ஒடிஸி குழு பயணிக்கப் போகிறது என்பது ஹைலைட்டான அம்சம்.

மொத்தத்தில் இந்த ஆண்டு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஒடிஸி எடிசனில் 83 ஆண்களும், 20 பெண்களும் கலந்து கொள்கின்றனர். அதில் தாய்லாந்து, இந்தோனேசியா, கொலம்பியா, ஃபிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ரைடர்களும் அடக்கம்.

பிறகென்ன காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராயல் என்ஃபீல்டுகள் கலக்கலாக ரவுண்டு அடிக்கப் போகின்றன...

பின் குறிப்பு: காஷ்மீரில் தற்போது கடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 21 பேர் இதுவரை கலவரத்தில் பலியாகியுள்ளனர். நிலைமை கட்டுக்குள் வருவதைப் பொருத்து ஹிமாலயன் ஒடிஸி பயணம் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Flags Off 13th & Its First Ever Himalayan Odyssey For Women.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X