ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் பைக் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

தற்போது, அறிமுகம் செய்யபட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் பற்றி...

ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் பற்றி...

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் தான், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இந்தியாவில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களில், சப் 500 சிசி செக்மண்ட் வகையில், இது தான் ஒரே மோட்டார்சைக்கிள் என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின், கியர்பாக்ஸ்;

இஞ்ஜின், கியர்பாக்ஸ்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், 410 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் அண்ட் ஆயில்-கூல்ட் கார்புரேட்டட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 6500 ஆர்பிஎம்களில் 24.5 பிஹெச்பி-யையும், 4000 - 4500 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 32 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின்களில், முதன் முறையாக இந்த மாடல் தான் சிங்கிள் ஓவர்ஹெட் கேம்ஷிஃப்ட் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் முன் சக்கரத்தில் 200 மில்லிமீட்டர் டிராவல் ஃப்ரண்ட் போர்க்-கள் உள்ளது.

பின் சக்கரத்தில், மோனோ ஷாக் உடனான 180 மில்லிமீட்டர் டிராவல் போர்க்-கள் உள்ளது. இந்த அமைப்புகள், முரட்டுத்தனமான அம்சங்களை சுலபமாக உபயோகிக்க உதவுகிறது.

பிரேக்;

பிரேக்;

21-இஞ்ச் அளவிலான முன் சக்கரத்தையும், 18-இஞ்ச் அளவிலான பின் சக்கரத்தையும் நிறுத்துவதற்கு, இந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில், டிஸ்க் பிரேக்-கள் பயனப்டுத்தபடுகிறது.

இது ஸ்போக்-களான வீல் அமைப்பை கொண்டுள்ளது.

ஃப்ரண்ட் பிரேக், 300 மில்லிமீட்டர் - 2-பிஸ்டன் ஃப்ளோட்டிங் கேளிப்பர் டிஸ்க்-கையும், ரியர் பிரேக் - 240 மில்லிமீட்டர் சிங்கிள் பிஸ்டன் ஃப்ளோட்டிங் கேளிப்பர் டிஸ்க்-கையும் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் - 1;

முக்கிய அம்சங்கள் - 1;

(*) ஹை (உயர்ந்த) கிரவுண்ட் கிளியரன்ஸ்

(*) எல்ஈடி டெய்ல் லேம்ப்

(*) ஆல்டிமீட்டர் மற்றும் காம்பஸ்

முக்கிய அம்சங்கள் - 2;

முக்கிய அம்சங்கள் - 2;

(*) எக்ஸ்ட்ரா (கூடுதல்) ஜெர்ரிகேன்களுக்கு, ஃப்யூவல் டேங்க்-கள் மீது மவுண்ட்கள் வழங்கபட்டுள்ளது

(*) லக்கேஜ்-களுக்கு ரியரிலும் மவுண்ட்கள் உள்ளது

(*) ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால், துவக்கத்தில் இருந்து உருவாக்கபட்ட புத்தம் புதிய ஹால்ஃப்-ட்யூப்லெக்ஸ் ஸ்ப்ளிட் கிரேடில்

வைப்ரேஷன்கள் இல்லாத மோட்டார்சைக்கிள்;

வைப்ரேஷன்கள் இல்லாத மோட்டார்சைக்கிள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில், வைப்ரேஷன்கள் குறைக்கும் வகையில், இஞ்ஜினுக்கு கவுண்டர் பேலன்ஸ் வசதி வழங்கபட்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், ஸ்னோ வைட் மற்றும் கிரானைட் பிளாக் ஆகிய 2 வண்ணங்களின் தேர்வுகளில் கிடைக்கிறது.

போட்டி?

போட்டி?

தற்போதைய நிலைவில், சப் 500 சிசி வகையில், இந்தியாவிலேயே ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மட்டும் தான் ஒரே அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

இதனால், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளுக்கு எந்த விதமான வாகனமும் போட்டியாக இல்லை.

வருங்காலத்தில், இந்தியாவில் கேடிஎம் நிறுவனம், தங்களின் 390 அட்வென்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தால், அதன் பிறகு போட்டி எழ வாய்ப்புகள் உள்ளது.

விலை;

விலை;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளின் விலை குறித்த தகவல்கள் வரும் மார்ச் மாதத்தில் தான் வெளியிடப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை... எந்த சாலையிலும் ஓட்டுவதற்கு ஹிமாலயன்!

ராயல் என்ஃபீல்டு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield has unveiled their Royal Enfield Himalayan Adventure Tourer motorcycle in India. This Royal Enfield Himalayan is their first adventure tourer. It is the only motorcycle in its type in the sub 500cc segment. Royal Enfield Himalayan Adventure Tourer motorcycle is available in 2 colour options - Snow White and Granite Black.
Story first published: Tuesday, February 2, 2016, 16:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X