ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்...

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்...

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், மிகவும் எதிர்பார்க்கபட்ட இரு சக்கர வாகனங்களில் ஒன்றாகும்.

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள் தான், 500-சிசிக்கும் குறைவான அளவு கொண்ட இந்தியாவின் முதல் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், புதிய 410 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் புதிய இஞ்ஜின், 6500 ஆர்பிஎம்களில் 24.5 பிஹெச்பியையும், 4000-4500 ஆர்பிஎம்களில் உச்சபட்சமாக 32 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் செயின் டிரைவ் மூலம் தான் பவரையும், டார்க்கையும், பின் சக்கரத்திற்கு கடத்துகிறது.

சேஸி;

சேஸி;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் சேஸி, பிரட்டனை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஹார்ரிஸ் பெர்ஃபார்மன்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த ஹார்ரிஸ் பெர்ஃபார்மன்ஸ் நிறுவனத்தை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கையகபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், சிங்கிள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் கொண்டுள்ளது. இந்த வசதி தற்போது தான் முதல் முறையாக

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் கவுண்டர் பேலன்ஸ் என்ற வசதி வழங்கபட்டுள்ளது. இது இஞ்ஜினில் இருந்து எழும் அதிர்வுகளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், 200 மில்லிமீட்டர் டிராவல் வகையிலான டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் முன் சக்கரத்தில் பொருத்தபட்டுள்ளது.

இதன் பின் சக்கரத்தில், 180 மில்லிமீட்டர் டிராவல் வகையிலான மோனோஷாக் ஃபோர்க்குகள் பின் சக்கரத்தில் பொருத்தபட்டுள்ளது.

மேலும், இது 220 மில்லிமீட்டர் அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் முன் சக்கரத்தில், 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் உள்ளது.

இதன் பின் சக்கரத்தில், சிங்கிள் பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது.

வீல்;

வீல்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் முன் சக்கரம், 21 இஞ்ச் அளவிலான விட்டம் (டயாமீட்டர்) கொண்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளின் பின் சக்கரம், 18 இஞ்ச் அளவிலான விட்டம் (டயாமீட்டர்) கொண்டுள்ளது. இதன் 2 சக்கரங்களும் ஸ்போக்குகளான ரிம்கள் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், முறையான அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் போல் காட்சி அளிக்கிறது.

இது நீண்ட டிராவல் சஸ்பென்ஷன், நேராக அமரும் வகையிலான அமைப்பு மற்றும் மேல் நோக்கியவாறு தோன்றும் எக்ஸ்ஹாஸ்ட் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் டேங்க்கின் மீது, ஜெர்ரிகேன்களை எடுத்து செல்லும் வகையிலான மவுண்ட்கள் பொருத்தபட்டுள்ளது.

மேலும், நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் வகையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் பின் பகுதியிலும் மவுண்ட்கள் வழங்கபட்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், இந்தியா முழுவதிலும் உள்ள 500+ ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

தற்போதைய நிலையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிளுக்கு நேரடி போட்டியாக எந்த ஒரு மோட்டார்சைக்கிளும் இல்லை.

விலை;

விலை;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள், 1.55 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் பைக் இந்தியாவில் அறிமுகம்

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை... எந்த சாலையிலும் ஓட்டுவதற்கு ஹிமாலயன்!

ராயல் என்ஃபீல்டு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Royal Enfield has launched their Himalayan adventure tourer motorcycle in Inida. Royal Enfield Himalayan adventure tourer motorcycle is India's first sub 500cc adventure tourer two wheeler in India. It has many attractive features. It is launched at starting price of Rs. 1.55 lakhs, ex-showroom (Mumbai). To know more about Royal Enfield Himalayan, Check here...
Story first published: Wednesday, March 16, 2016, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X