கேடிஎம் 390 இஞ்ஜின் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு ஹிமாலயன் பார்த்தீங்களா?

Written By:

எவ்வளவு தான், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறந்த தயாரிப்புகளை வழங்கினாலும், வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தகைய மாற்றங்கள், கூடுதல் அழகு சேர்க்கும் முயற்சியிலும், செயல்திறன் கூட்டும் முயர்ச்சியிலும் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில், கேடிஎம் 390 இஞ்ஜின் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின் மாற்றம்;

இஞ்ஜின் மாற்றம்;

ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் கொண்டுள்ள இந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர், தனது ஹிமாலயனின் திறன் போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. ஹிமாலயனின் எல்எஸ் 410சிசி (LS 410cc) இஞ்ஜினுக்கு பதிலாக, கேடிஎம் டியூக் 390 இஞ்ஜினை பொருத்தி கொண்டுள்ளார். இவ்வாறாக, அவர் இந்தியாவின் முதல் அட்வென்ச்சர் டூரரின் தனது வடிவத்தை உருவாக்கியுள்ளார்.

டிஸ்பிளே;

டிஸ்பிளே;

ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில், கேடிஎம் டியூக் 390 இஞ்ஜினை பொருத்தவில்லை. இந்த வாடிக்கையாளர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் மீட்டர் கன்சோலை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக கேடிஎம் டியூக் 390 மாடலின் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளேவை பொருத்தியுள்ளார்.

பிற மாற்றங்கள்;

பிற மாற்றங்கள்;

இந்த மோட்டார்சைக்கிளில் செய்யபட்ட மாற்றங்கள் கச்சிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் உள்ளது. இந்த வாடிக்கையாளர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் ஷிஃப்டர் ராட், டர்ன் இன்டிகேட்டர்கள், செண்டர் கன்சோல், இஞ்ஜின், கூலன்ட் ரிசர்வாயர் ஆகியவற்றை எடுத்துவிட்டு மாற்று உபகரணங்களை பொருத்தியுள்ளார்.

ஸ்பிராக்கெட் அமைப்பு;

ஸ்பிராக்கெட் அமைப்பு;

ஸ்பிராக்கெட் செட்டப்-பும் கேடிஎம் டியூக் 390 மாடலில் காணப்படுவதை காட்டிலும் வித்தியாசமானதாக உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் பெரிய ரியர் ஸ்பிராக்கெட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் உச்சபட்ச வேகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதன் மிதமான இயத்தின் போது (low-end power delivery) வெளியாகும் பவர் வெளிப்பாடு மேம்படும்.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

இத்தகைய கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் பார்க்க நன்றாக தான் உள்ளது. ஆனால், கேடிஎம் டியூக் 390 இஞ்ஜினின் 44 பிஹெச்பி திறன் வெளிப்பாட்டை ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் சேஸி தாங்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

"ஹிமாலயன் 390" என்றும் அழைக்கப்பட கூடிய இவ்வாறு மாற்றங்கள் செய்யபட்ட மோட்டார்சைக்கிள் பற்றிய உங்களின் கருத்துகளை நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

Spy Pics Credit ; www.team-bhp.com

English summary
Prbably thinking that, his Himalayan is underpowered, one biker has created his version of India's first adventure tourer. The owner of this Himalayan opted to swap LS 410cc engine with KTM Duke 390 engine. This owner has also replaced shifter rod, turn indicators, centre console, engine, coolant reservoir, etc. To know more about so called "Himalayan 390", check here...
Story first published: Tuesday, September 20, 2016, 13:19 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos