ராயல் என்பீல்டு கியர்களை ஃபிளிப்கார்ட் இணையதளம் மூலமாக வாங்கலாம்

Written By:

ராயல் என்பீல்டு நிறுவனம், தங்கள் பைக்குகளின் கியர்களை ஃபிளிப்கார்ட் இணைய வழி விற்பனை நிறுவனம் மூலம் வாங்கும் வகையிலான ஏற்பாடு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம், இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதே போல், ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இணைய வழி விற்பனையில் முன்னோடியாக விளங்கி வருகிறது. தற்போது, இந்த 2 நிறுவனங்களும் ஒன்றாக கை கோர்த்துள்ளன.

royal-enfield-riders-gears-available-online-on-flipkart-01

இனி, ஃபிளிப்கார்ட் இணையதளம் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கியர்களை வாங்க முடியும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அப்பேரல், சாட்டில் பேக், ஹெல்மெட்கள், டி-ஷர்ட்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் பூட் உள்ளிட்டவை, இப்படி ஃபிளிப்கார்ட் மூலம் ஆன்லைனில் கிடைக்கிறது.

royal-enfield-riders-gears-available-online-on-flipkart-02

சமீபகாலமாக, ராயல் என்பீல்டு நிறுவனம், நகர்ப்புறங்களுக்கும், டூரிங் செய்யும் சூழ்நிலைகளுக்கும், ஏற்ற வகையிலான பிராண்டட் கியர்களை வழங்க துவங்கியது. ஃபிளிப்கார்ட் மூலம் இந்த கியர்களை வாங்கும் போது, இந்நிறுவனம் சிக்கல்கள் இல்லாத ஷாப்பிங் அனுபவத்தையும், குறித்த நேரத்திலான டெலிவரியை உறுதி செய்கிறது.

royal-enfield-riders-gears-available-online-on-flipkart-03

ராயல் என்பீல்டு நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி குறித்து, ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் உயார் அதிகாரி ஆதர்ஷ் கே. மேனன் மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் மேலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

"ராயல் என்பீல்டு நிறுவனம், இந்தியாவின் மிகவும் அதிக நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற்ற மோட்டார்சைக்கிள் பிரான்ட் ஆகும். மேலும், இது வளர்ந்து கொண்டே வரும் ரைடர் கம்யூனிட்டியின் (சமூகம்) ரூபமாக திகழ்கிறது. ரைடர் கம்யூனிட்டிகளின் முன்னோடியாக உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் கை கோர்த்தது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளோம்" என ஆதர்ஷ் கே. மேனன் கூறினார்.

royal-enfield-riders-gears-available-online-on-flipkart-04

மேலும், "ராயல் என்பீல்டு நிறுவனம், தங்களின் கியர் ரேஞ்ச் மற்றும் வாகன ரேஞ்ச் மூலம் தங்களுக்கு என ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டுள்ளனர். ராயல் என்பீல்டு நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டணி மூலம், ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த உலகளாவிய பிராண்டின் ஒரிஜினல் கியர்களை, வீட்டில் இருந்த படியே எளிதாக வாங்கி மகிழ முடியும்" என ஆதர்ஷ் கே. மேனன் தெரிவித்தார்.

royal-enfield-riders-gears-available-online-on-flipkart-05

ஃபிளிப்கார்ட் நிறுவனம், சமீபத்தில் தான் ஆட்டோமோட்டிவ் வர்த்தகத்தில் தடம் பதித்தது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த மோட்டார்சைக்கிள்களை புக்கிங் செய்து கொள்ள முடியும்.

English summary
Royal Enfield has joined hands with Flipkart. Royal Enfield - most trusted and respected motorcycle brands in India is offering their gears like apparel, saddle bags, helmets, T-shirts, jackets, and boots through Flipkart - one of India's largest online marketplace. Fans of Royal Enfield can be part of this iconic global brand by having easy access to authentic and genuine gear range...
Story first published: Thursday, June 30, 2016, 16:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X