ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தன்டர்பேர்டு, கிளாசிக் மாடல்களை மேம்படுத்த திட்டம்

Written By:

ராயல் என்பீல்டு நிறுவனம், தங்களின் புதிய தன்டர்பேர்டு மற்றும் கிளாசிக் ஆகிய மாடல்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த மேம்படுத்துதல் திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றி...

வெற்றி...

ராயல் என்பீல்டு நிறுவனம், இந்திய வாகன சந்தைகளிலும், சர்வதேச வாகன சந்தைகளிலும் நல்ல வெற்றியை குவித்து வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் தன்டர்பேர்டு மற்றும் கிளாசிக் 350 மற்றும் 500, சிறந்த முறையில் விற்பனையாகும் மாடல்களாக உள்ளன. தற்போது, இந்நிறுவனம் இந்த மாடல்களை சில மேம்பாடுகள் செய்து வழங்க திட்டமிட்டு வருகிறது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

மாபெரும் மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டு, முற்றிலும் புதிய தலைமுறை தன்டர்பேர்டு மற்றும் கிளாசிக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எனினும், இவை அனைத்தும் நெடுநோக்குடைய வருங்கால திட்டங்களின் ஒரு பகுதியாகவே உள்ளன.

2016-க்கான மேம்பாடுகள்;

2016-க்கான மேம்பாடுகள்;

தற்போதைய நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களின் தன்டர்பேர்டு மற்றும் கிளாசிக் உள்ளிட்ட மாடல்களில் கிளட்ச், பிரேக்குகள் மற்றும் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, 2016-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஹிமாலயன்...

ஹிமாலயன்...

சமீபத்தில் தான், ராயல் என்பீல்டு நிறுவனம், ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை 410 சிசி என்ற புதிய இஞ்ஜினுடன் அறிமுகம் செய்தது. மேலும், இதில் பொருத்தபட்டிருந்த ஓவர்ஹெட் கேம்ஸ் மற்றும் கவுண்டர் பேலன்ஸர் ஆகியவற்றை பொருத்தியது.

இதன் மூலம், அதிர்வுகள் உள்ளிட்ட தேவை இல்லாத பிரச்னைகளை ஓர் அளவிற்கு கட்டுபடுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளது.

இதே போன்றே நிபுனத்துவங்களை, தங்களின் புதிய 410 சிசி மற்றும் 650 சிசி இஞ்ஜின் கொண்ட வாகனங்களிலும் உபயோகிக்க உள்ளது.

புதிய திட்டங்கள்;

புதிய திட்டங்கள்;

650 சிசி இஞ்ஜின் பொருத்தவரை, ராயல் என்பீல்டு நிறுவனம் இங்கிலாந்தில் புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை நிறுவியுள்ளது.

உலகளாவிய சந்தைகளில் வெற்றிகரமான இடத்தை பிடிக்க, குரூஸிங் வேகங்களில் இயங்க கூடிய அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை வழங்க வேண்டியுள்ளது.

புதிய தலைமுறை வாகனங்கள் அதிக திறன் கொண்டதாகவும், நல்ல தரத்தில் இருக்கும் என எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த 650 சிசி மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சர்வதேச சந்தைகளில் சிறந்த வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஹிமாலயன் வழங்கபடும் முறைகள்;

ஹிமாலயன் வழங்கபடும் முறைகள்;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், கார்புரேட்டர் அமைப்புடன் வழங்கபடுகிறது.

எனினும், சர்வதேச சந்தைகளில், இதை வழங்க வேண்டுமெனில் அதற்கு ஏற்ற யூரோ மாசு உமிழ்வு விதிமுறைகள் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதனால், சர்வதேச சந்தைகளுக்கான ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில், ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் வழங்கபடுகிறது.

குறிக்கோள்;

குறிக்கோள்;

தற்போதைய நிலையில், நடுத்தர-திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் செக்மண்ட்டானது, ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரயம்ஃப் ஆகியவற்றின் ஆதிக்கத்தில் உள்ளது.

தங்களின் மோட்டார்சைக்கிள்களில் மேற்குறிபிட்டது போன்ற மேம்பாடுகள் வழங்கி, இந்த செக்மண்ட்டில் தங்களுக்கு என தனி இடத்தை பிடிக்க ராயல் என்பீல்டு நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

தன்டர்பேர்டு தொடர்புடைய செய்திகள்

ஹிமாலயன் தொடர்புடைய செய்திகள்

ராயல் என்பீல்டு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Royal Enfield is enjoying success with best-selling models of Thunderbird and Classic 350 and 500. Now, they are looking to update these motorcycles with minor changes. The Current models are to be updated with changes in clutch, brakes, and headlamp etc. These new variants of Royal Enfield shall be introduced by the end of 2016. To know more, check here...
Story first published: Tuesday, May 10, 2016, 13:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark