ஸ்பெரோ இ-பைக் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஸ்பெரோ இ-பைக் எனப்படும் எலக்ட்ரிக் சைக்கிளை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. ஸ்பெரோ என்ற எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த ஸ்பெரோ இ-பைக்கை தயாரித்து வழங்குகிறது.

ஸ்பெரோ இ-பைக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

ஸ்பெரோ இ-பைக், இ30, இ60 மற்றும் இ100 என மொத்தம் 3 வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இ30 மற்றும் இ100 வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஆண்களுக்காக அறிமுகம் செய்யபட்டுள்ளது. இ60 வேரியன்ட்டை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவர்களும் உபயோகிக்கலாம்.

கிரவுட் ஃபண்டிங்;

கிரவுட் ஃபண்டிங்;

ஸ்பெரோ என்ற இந்த எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனம், கிரவுட் ஃபண்டிங் எனப்படும் வெகுஜன நிதி திரட்டும் முறையில், இந்த ஸ்பெரோ இ-பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பெரோ இ-பைக் தான் கிரவுட் ஃபண்டிங் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் இ-பைக் ஆகும்.

இவ்வாறு முன்னதாகவும் ஒரு முறை, கிரவுட் ஃபண்டிங் என்ற பின்பற்றி இந்த இ-பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அப்போது கிடைத்த நல்ல வரவேற்ப்பை தொடர்ந்து, இந்த கிரவுட் ஃபண்டிங் முறையை 2-வது முறையாக பின்பற்றி இந்த இ-பைக்கை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

ஸ்பெரோ இ-பைக்கின் இ30 வேரியன்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 30 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

ஸ்பெரோ இ-பைக்கின் இ60 வேரியன்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

ஸ்பெரோ இ-பைக்கின் இ100 வேரியன்ட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோமீட்டர் வரை பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.

பேட்டரி;

பேட்டரி;

ஸ்பெரோ இ-பைக்கின் இ30, இ60 மற்றும் இ100 ஆகிய 3 வேரியன்ட்களிலும் கியர் உடைய 250W பிரெஷ்லெஸ் எலக்ட்ரிக் மோட்டாருக்கு சக்தி அளிக்க கூடிய வகையிலான 48V லித்தியம்-இயான் பேட்டரி பொருத்தபட்டுள்ளது.

சார்ஜிங்;

சார்ஜிங்;

2 மணி நேரம் சார்ஜிங் செய்வதன் மூலம், ஸ்பெரோ இ-பைக்கின் இ-பைக்குகள் 80% என்ற அளவிற்கு சார்ஜிங் ஆகிவிடுகிறது.

எனினும், இந்த பைக்கிகளை 100% சார்ஜிங் செய்யவேண்டும் என்றால் மேலும் 2 மணி நேரம் ஆகும்.

மாற்று சார்ஜிங் முறை;

மாற்று சார்ஜிங் முறை;

ஸ்பெரோ இ-பைக்கை ரீஜெனெரேஷன் எனப்படும் மாற்று முறையிலும் சார்ஜ் செய்யலாம்.

நீங்கள் இந்த ஸ்பெரோ இ-பைக்கை ஜோராக பெடல் செய்யும் போதும், முன் பக்கத்தில் உள்ள சிங்கிள் பிரேக்கை (டிஸ்க் பிரேக்கை) உபயோகிஈகும் போதும் சார்ஜ் உருவாகி தேக்கிவைத்து கொள்ளப்படுகிறது.

வேகம்;

வேகம்;

ஸ்பெரோ இ-பைக்கில், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 25 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை வெறும் 10 நொடிகளில் எட்டிவிடலாம்.

எடை;

எடை;

ஸ்பெரோ இ-பைக், வெறும் 24 கிலோகிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இது 100 கிலோகிராம் வரையிலான எடையை சுமக்கும் திறன் உடையதாகும்.

பின்குறிப்பு;

பின்குறிப்பு;

ஸ்பெரோ இ-பைக்கை இயக்கும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சாலைகளில் உள்ள குழிகளில் கவனமாக இருக்கவும். ஏனெனில், இந்த ஸ்பெரோ இ-பைக்கில் ரியர் சஸ்பென்ஷன் வசதி இல்லை என்பதில் நினைவில் கொள்ள வேண்டும்.

புக்கிங்;

புக்கிங்;

ஸ்பெரோ இ-பைக்குகளை, பெங்களூருவை மையமாக கொண்டு இயக்கும் கிரவுட் ஃபண்டிங் இணையதளமான www.fuelyourdream.com மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

விலை;

விலை;

ஸ்பெரோ இ-பைக்கின் அடிப்படை வேரியன்ட் 29,999 ரூபாய் என்ற விலையிலும், டாப் என்ட் வேரியன்ட் 47,999 ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் ஸ்விஸ் மிலிட்டரி சைக்கிள் ரேஞ்ச் இந்தியாவில் அறிமுகம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க மடக்கக்கூடிய சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

சைக்கிள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Spero's E-Bike is India's first ever crowdfunded Electric Bike (Electric Cycle). After achieving great success with first round of crowdfunding, electric bike manufacturer Spero has started same route again. Spero Ebike is now available in three different variants: E30, E60, and E100. These E-Bikes can be preordered at www.fuelyourdream.com. To know more, check here...
Story first published: Wednesday, August 31, 2016, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X