குளிர்ச்சி அளிக்கும் ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட் அறிமுகம்

Written By:

இந்தியாவின் முன்னோடி ஹெல்மெட் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஸ்டீல்பர்ட், தங்களின் ஏர் சீரிஸ் கீழ் புதிய ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளனர். விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் புதிய புதிய தயாரிப்புகள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தற்போது குளிர்ச்சி அளிக்கும் ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டீல்பர்ட்டின் புதிய ஹெல்மெட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ்...

எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ்...

ஸ்டீல்பர்ட் நிறுவனம், எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட் என்ற புதிய ஹெல்மெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெல்மெட்டின் சிறப்பு அம்சமே, இதை போட்டுகொண்டால், தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இந்த புதிய ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஹெல்மெட் தான் உலகின் முதல் காற்று சுழற்சி வசதி கொண்ட ஹெல்மெட் (air ventilation technology helmet) ஆகும்.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

வென்டிலேஷன் சிஸ்டம் (காற்றோட்ட அமைப்பு) கொண்ட ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஹெல்மெட், இத்தாலியில் உள்ள ஸ்டீல்பர்ட் நிறுவனத்தின் ஆர் அன்ட் டி மையத்தில் உருவாக்கப்பட்டது.

சிறப்பு அம்சம்;

சிறப்பு அம்சம்;

ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஹெல்மெட்டில் உள்ள கூலிங் வென்ட்கள் (குளிர்ந்த வெளியேற்ற துவாரங்கள்), ரைடர்களின் தலையை குளுமையாக வைத்திருக்க உதவுகிறது.

டிசைன்;

டிசைன்;

ஸ்டீல்பர்ட் நிறுவனம் வழங்கும் இந்த ஏர் சிரீஸ் ஹெல்மெட்கள் மொத்தம் 14 டிசைன்களிலும், வெவ்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது. இந்த ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஹெல்மெட்கள், ஆன்லைனிலும், முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியாவிற்கான ஹெல்மெட்;

இந்தியாவிற்கான ஹெல்மெட்;

ஸ்டீல்பர்ட் நிறுவனம், இந்த எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட்டை, இந்தியாவின் அதிகமான வெப்பநிலையை மனதில் கொண்டு உருவாக்கபட்டது. வெளியில் உள்ள வெப்பநிலையை காட்டிலும், இந்த ஹெல்மெட்டின் உள்ளே உள்ள வெப்பநிலை, 4 முதல் 5 டிகிரி வரை குளுமையாக இருக்கும் என ஸ்டீல்பர்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஹெல்மெட்டின் உள்ளே காற்று நுழைவதற்கு ஏதுவாக 3 ஏர் வென்ட்களும், சூடான காற்றை வெளியேற்றும் வகையில், ஒரு ஏர் வென்ட்டும் உள்ளது. இதில் உள்ள இபிஎஸ் ரிக்குகள் (EPS rigs) சூடான காற்று, உள்ளே தங்காமல் இருப்பத்தையும், சீரான காற்று சுழற்ச்சி நடைபெறுவதையும் உறுதி செய்கிறது.

விலை;

விலை;

ஸ்டீல்பர்ட் நிறுவனத்தின் இந்த ஏர் சிரீஸ் ஹெல்மெட்கள், 1,799 ரூபாய் என்ற துவக்க விலையில் இருந்து கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இது மாதிரி ஹெல்மெட்டுகளை பார்த்திருக்கீங்களா?

ஃபோல்டிங் ஹெல்மெட்... பையில் மடக்கி வைத்து எடுத்துச் செல்லலாம்!

வித்தியாசம், விசித்திரம்... வகைவகையான ஹெல்மெட்டுகள்!!

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

மார்க்கெட்டில் கிடைக்கும் ஹெல்மெட் வகைகளின் சாதக, பாதகங்கள்!

ஹெல்மெட் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!

அச்சமூட்டும் டிசைனிலான ஹெல்மெட் மாடல்கள்...!!

English summary
Helmet manufacturer, Steelbird recently launched new helmet under its Air Series in India. This new ventilated helmet is named SBA 1 Free Live. Steelbird claims that, new helmet comes from world's first patented air ventilation technology helmet in India. New technology in this helmet was developed by Steelbird's R&D unit in Italy. To know more about SBA 1 Free Live, check here...
Story first published: Friday, September 23, 2016, 17:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark