குளிர்ச்சி தரும் ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

இந்தியாவின் முன்னணி ஹெல்மெட் உற்பத்தி நிறுவனமான ஸ்டீல்பர்ட், ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட் என்ற புதிய ஹெல்மெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஹெல்மெட்டின் சிறப்பு அம்சமே, இதை போட்டுகொண்டால், தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

இதில் உள்ள கூலிங் வென்ட்கள் (குளிர்ந்த வெளியேற்ற துவாரங்கள்), ரைடர்களின் தலையை குளுமையாக வைத்திருக்கும். இந்த வென்டிலேஷன் சிஸ்டம் (காற்றோட்டம் அமைப்பு) இத்தாலியின் ஆர் அன்ட் டி மையத்தில் அறிமுகம் செய்யபட்டது.

steelbird-sba-1-free-live-air-helmet-with-cooling-effect-launched-in-india

இந்த ஸ்டீல்பர்ட், ஸ்டீல்பர்ட் எஸ்பிஏ 1 ஃப்ரீ லைவ் ஏர் ஹெல்மெட், இந்தியாவின் சூடான வெப்பநிலையை மனதில் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

வெளியில் உள்ள வெப்பநிலையை காட்டிலும், இந்த ஹெல்மெட்டின் உள்ளே உள்ள வெப்பநிலை, 4 முதல் 5 டிகிரி வரை குளுமையாக இருக்கும் என ஸ்டீல்பர்ட் நிறுவனம் கூறுகிறது. இந்த ஹெல்மெட்டின் உள்ள காற்று நுழைவதற்கு ஏதுவாக 3 ஏர் வென்ட்களும், சூடான காற்றை வெளியேற்றும் வகையில், ஒரு ஏர் வென்ட்டும் உள்ளது.

ஸ்டீல்பர்ட் நிறுவனம் இந்த ஏர் சிரீஸ் ஹெல்மெட்களில் மொத்தம் 14 டிசைன்கள் கொண்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள், ஆன்லைனிலும், முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஸ்டீல்பர்ட் நிறுவனத்தின் இந்த ஏர் சிரீஸ் ஹெல்மெட்கள், 1,799 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Indian Helmet manufacturer Steelbird has launched new helmet called Steelbird SBA 1 Free Live AIR in India. This helmet features cooling vents, which keeps rider's head cool, even at high temperatures. Steelbird claims that, temperature inside the head is almost 4 to 5-degree Celsius cooler than ambient temperature. Prices of AIR series of helmets, starts at Rs. 1,799 onwards. To know more, check here...
Story first published: Wednesday, June 15, 2016, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X