அந்தரத்தில் பறந்த கேடிஎம் பைக்: மரணத்தில் முடிந்த சாகசம்!

Written By:

கடந்த வார இறுதியில் பெங்களூரிலிருந்து சிக்மகளூருக்கு சுற்றுலா இளைஞர்கள் குழுவின் பயணம் சோகத்தில் முடிந்தது. சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பும்போது கேடிஎம் ஆர்சி390 பைக்கை ஓட்டிய இளைஞர் ஒருவர் வீலிங் செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது, அந்த பைக்கை ஓட்டியவரும், பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பைக்கை ஓட்டிய இளைஞர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் சுய நினைவில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் பயணித்த பைக் சீறிப்பாய்ந்து சாலையோரம் இருந்த மரத்தில் சென்று சிக்கியது. இது ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.

நித்தம் ஒரு விபத்து

நித்தம் ஒரு விபத்து

தற்போது சூப்பர் பைக் விற்பனை சூடு பறக்கும் நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அடிக்கடி சூப்பர் பைக் விபத்து குறித்த தகவல்களை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Image Credit: KTM Fans FB Page

 ஆமதாபாத் விபத்து

ஆமதாபாத் விபத்து

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் எஸ்ஜி நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்ற ட்ரையம்ஃப் டேடோனா 675 பைக் ஒன்று, எதிரே வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பவர்ஃபுல் பைக்

பவர்ஃபுல் பைக்

ட்ரையம்ஃப் டேடோனோ 675 பைக்கில் இருக்கும் 675சிசி எஞ்சின் அதிகபட்சமாக 131 பிஎஸ் பவரை அளிக்க வல்லது. அதாவது, ஒரு எஸ்யூவி காருக்கு நிகரான சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பயிற்சி

பயிற்சி

ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் விற்பனை இலக்கை மட்டுமே மையமாக மனதில் கொண்டு செயல்படுகின்றன. ஆனால், தங்களது நிறுவனத்தின் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பைக்குகளை ஓட்டுவதற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்கினால், ஓரளவு இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க ஏதுவாகும்.

கடுமையான விதி

கடுமையான விதி

பொது சாலையில் இதுபோன்ற வீலிங் செய்வது போன்ற சாகசங்களால், பைக் ஓட்டிகளின் உயிர் மட்டுமல்ல, சாலையில் இதர வாகன ஓட்டிகளின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, 200சிசி திறனுக்கும் மேலான பைக்குகளை வாங்குவோர்க்கு சிறப்பு பயிற்சி கொடுத்து, பிரத்யேக டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை கட்டாயமாக்குவதும் அவசியம்.

சுய கட்டுப்பாடு

சுய கட்டுப்பாடு

எவ்வளவுதான் பயிற்சியும், விதிமுறைகளும் இருந்தாலும் பைக்கை ஓட்டும் இளைஞர்கள் சாலையில் செல்லும்போது சுயக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். இல்லையெனில், சூப்பர் பைக்குகளால் ஏற்படும் உயிரிழப்பு சதவீதம் வரும் ஆண்டுகளில் வெகுவாக அதிகரிக்கும்.

Images Source  

English summary
Super Bike Accidents In India Increasing At An Alarming Rate.
Story first published: Wednesday, March 30, 2016, 9:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more