54,000 புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் ரீகால் செய்யப்படுகிறது

By Ravichandran

சுஸுகி நிறுவனம், தாங்கள் தயாரித்து வழங்கும் புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் 54,000 யூனிட்க்ளுக்கும் கூடுதலான வாகனங்களை ரீகால் செய்துள்ளனர்.

சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரை கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்தனர். தற்போது, திரும்ப அழைக்கப்பட்ட வாகனங்கள், மார்ச் 8, 2016 முதல் ஜூன் 22, 2016 ஆகிய தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டவை ஆகும்.

suzuki-access-125-scooters-recalled-in-india-now

ரியர் ஆக்சில் ஷாஃப்ட் கோளாறு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாக, முன் எச்சரிக்கை ரீதியாக இந்த ரீகால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இன்று (ஜூலை 13) துவங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், சுஸுகி நிறுவனம் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுஸுகி நிறுவனம், பாதிக்கப்பட்ட சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் ரியர் ஆக்சில் ஷாஃப்ட்களை, இலவசமாக மாற்றி தருகிறது. மேலும், டீலர்ஷிப்களிடம் ரீபிளேஸ்மன்ட் தொடர்பாக ரிப்போர்ட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு சேவை வழங்கப்படுகிறது.

இது குறித்து சுஸுகி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் அதீதமான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான சுஸுகியின் அர்ப்பணிப்பு காரணமாக நாங்கள் இந்த ரீகால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இந்த ரீகால் நடவடிக்கையில் போது, சில புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் காணப்பட்ட ரியர் ஆக்சில் / வீல் ஸ்டெபிளிட்டி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்" என தெரிவித்தார்.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது, சிறந்த முறையில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக உள்ளது.

புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், சிங்கிள் சிலிண்டர் உடைய 124 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 8.5 பிஹெச்பியையும், 9.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

புதிய சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், ஒரு லிட்டருக்கு 53 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் எரிபொருள் திறன் கொண்டுள்ளது. இது சுமார் 58,000/- ரூபாய் என்ற (ஆண்-ரோட் டெல்லி) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Suzuki has made announcement to recall 54,740 units of newly launched Access 125 scooter in Indian market. These models recalled have been manufactured between March 8 and June 22, 2016. Suzuki is to inspect and replace the rear axle shaft as precautionary measure. Starting today (July 13), Suzuki will contact those owners whose scooters are affected. To know more, check here...
Story first published: Wednesday, July 13, 2016, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X