சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் நாளை இந்தியாவில் அறிமுகம்

Written By:

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் செப்டம்பர் 9-ஆம் தேதி (நாளை) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் தொடர் பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது. இதையொட்டி, சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் சில அறிமுகங்களுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், அறிமுகம் செய்யப்படும் சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்...

ஸ்பெஷல் எடிஷன்...

இந்தியாவில் பண்டிகை காலங்களை ஒட்டி, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனம் தங்கள் தயாரிப்புகளின் அறிமுகங்களை மேற்கொள்கின்றனர். இப்படியாக சுஸுகி நிறுவனமும், தங்களின் சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரை ஸ்பெஷல் எடிஷன் அவதாரத்தில் அறிமுகம் செய்கின்றனர்.

சிறப்புகள்;

சிறப்புகள்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டருக்கு ஸ்பெஷல் டீகேல்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் உடைய பிரத்யேகமான பெயிண்ட் வேலைப்பாடுகள் வழங்கப்படும். அத்துடன், சுஸுகி இஞ்ஜினியர்கள் வேறு சில மேம்பாடுகளை வழங்கலாம்.

ஸ்பெஷல் எடிஷன் டேக் உடன், இந்த சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர், கூடுதல் ஸ்டைலுடன் காட்சி அளிக்கும்.

மெக்கானிக்கல் மாற்றங்கள்;

மெக்கானிக்கல் மாற்றங்கள்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில், சுஸுகி நிறுவனம் எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களையும் மேற்கொள்ளது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் 124சிசி இஞ்ஜின், 8.58 பிஹெச்பியையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

பிரேக்;

பிரேக்;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டருக்கு, டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கபட்டுள்ளது.

விலை;

விலை;

சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர், 56,784 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கப்படுகிறது. இந்த சுஸுகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரின் விலை, சற்று கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Suzuki Motorcycles India is planning to launch Special Edition of Suzuki Access 125 Scooter in India. Unique paint job with special decals and stickers is offered with Special Edition Access 125. Couple of unique updates could also be included by Suzuki engineers. Expect more stylish and appealing avatar of Suzuki Access 125 under Special Edition tag. To know more, check here...
Story first published: Thursday, September 8, 2016, 7:03 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos