சுஜூகி ஆக்சஸ் பழைய மாடல் இனி மார்க்கெட்டுக்கு வராது?

Written By: Krishna

சுஜூகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கென தனி வாடிக்கையாளர் கூட்டம் உள்ளது. ஸ்விஸ், லெட்ஸ் ஆகிய இரு மாடல்களும் விற்பனையில் சுமார் என்றாலும், ஆக்சஸ் 125 மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதில் இரண்டு வகையான மாடல்கள் மார்க்கெட்டில் உள்ளன. ஒன்று பழைய வெர்சன், மற்றொன்று புதிய 125 மாடல். இப்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால், பழைய ஆக்சஸ் மாடலின் விற்பனையை நிறுத்திக் கொள்ள சுஜுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

சுஸுகி ஸ்கூட்டர்

புதிய மாடல் வண்டி டிஸ்க் பிரேக் மற்றும் பிரேக் என இரு வேறு வகைகளில் வருகின்றன. கிராபிக்ஸ், வடிவமைப்பு ஆகியற்றில் சிறிய அளவு மாற்றங்கள் இருக்கின்றன.

இதன் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதிய மாடல் ஆக்சஸ் 125 வண்டியையே அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். பழைய மாடலுக்கு இருக்கும் வரவேற்பு குறைந்ததாலும், விற்பனையில் மந்த நிலை காணப்படுவதாலும், அதை மார்க்கெட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதென சுஜுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுஜுகி ஷோ ரூம்களில் வெகு சிலவற்றில் மட்டுமே பழைய மாடல் இருப்பு உள்ளதாகத் தெரிகிறது. அந்த மாடல் ஆக்சஸ் ஸ்கூட்டரைக் கேட்டு வரும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அவை விற்பனை செய்யப்படுகின்றன. அதுவும் ஸ்டாக் உள்ளவரை மட்டும்தானாம்.

பொதுவாகவே சுஜுகி ஆக்சஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற வகையிலான ஸ்கூட்டராக இருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த மாடல் தன் வசம் ஈர்ததுள்ளது.

ஸ்கூட்டர் செக்மெண்டில் உச்ச விற்பனையைக் கொண்டிருக்கும் ஆக்டிவாவைக் காட்டிலும் விலை குறைவு என்பதால், வாடிக்கையாளர்களின் தேர்வு ஆக்சஸ் மாடலின் பக்கமும் திரும்பி உள்ளது.

124 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7,000 ஆர்பிஎம்-இல் 8.58 எச்.பி. குதிரைத் திறனையும், 5,000 ஆர்பிஎம்-இல் 9.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் இதில் உள்ளது.

லிட்டருக்கு 57 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என சுஜுகி நிறுவனம் உறுதி அளிக்கிறது. 45 - 50 கிலோ மீட்டராவது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இருக்கைக்கு கீழ் பொருள்களை வைப்பதற்கான இடவசதி - 20 லிட்டர்

எடை- 112 கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு - 6 லிட்டர்

விலை டிரம் பிரேக் (புதிய மாடல்) - ரூ.59,222 (பெங்களூர் எக்ஸ் ஷோ ரூம் விலை)

டிஸ்க் பிரேக் (புதிய மாடல்) - ரூ.62,780

பழைய மாடல் - ரூ.57,122 (மேற்கூறிய அனைத்தும் தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை)

English summary
Suzuki Could Discontinue Older Variant Of Access 125 Scooter

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark