ஹோண்டா க்ரோமுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறதா சுஜுகி எக்ஸ்டிரிகர்?

Written By: Krishna

மினி பைக் மாடலை விரும்புபவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா க்ரோம் இப்போது சர்வதேச மார்க்கெட்களில் செம ஹிட்.

தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் கணிசமான மார்க்கெட்டை க்ரோம் கொண்டுள்ளது.

சுஸுகி எக்ஸ்டிரிகர்

க்ரோமுக்குப் போட்டியாக கவாஸகி ஜி125 களமிறங்கியது. தற்போது அந்த வரிசையில் புதிதாக வரவுள்ளது சுஜுகி நிறுவனத்தின் எக்ஸ்டிரிகர் பைக்.

கடந்த 2013-ஆம் ஆண்டு சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதன் வித்தியாசமான அம்சங்கள் வாவ் என பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்தன.

சுஸுகி எக்ஸ்டிரிகர் 1

அந்த மாடலை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சுஜூகி நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கான உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எக்ஸ்டிரிகர் மாடலுக்கான காப்புரிமையை பெறும் முயற்சியிலும் சுஜுகி நிறுவனம் இறங்கியுள்ளது.

அந்த மாடலின் முக்கியப் போட்டியாக மார்க்கெட்டில் இருப்பது க்ரோம்தான். அதன் சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால் வித்தியாசமான வடிவமைப்புதான் அந்த மாடலுக்கு லைக் போட வைக்கும் முக்கிய காரணம்.

இதைத் தவிர, 124.9 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன், 9.8 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 10.9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் க்ரோம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 கியர்கள் உள்ள பக்கா பைக் மாடல் இது.

இதேபோல் கவாஸகி ஜி 125 மாடலை எடுத்துக் கொண்டால் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொறுத்தப்பட்ட 125 சிசி பைக் அது.

இந்த இரண்டு மாடல்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டுள்ளது சுஜுகி எக்ஸ்டிரிகர். எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கக்கூடிய வண்டி இது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டால், 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு எக்ஸ்டிரிகர் மைலேஜ் கொடுக்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மினி பைக் மார்க்கெட்டில் புதிய வரவாக களமிறங்கும் எக்ஸ்டிரிகர் சர்வதேச மார்க்கெட்டுகளில் 2017-ஆம் ஆண்டிலிருந்து வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Suzuki Extrigger Electric Mini Bike To Compete With The Honda Grom?
Please Wait while comments are loading...

Latest Photos