சுஸுகி ஜிக்சர் 250 அல்லது புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம்

Written By:

சுஸுகி நிறுவனம், சுஸுகி ஜிக்சர் 250 அல்லது புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள், அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய வாகன சந்தைகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களும், இந்தியாவில் தடம் பதித்து வருகின்றனர். இந்த நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் உள்ளிட்டவையும், தங்களின் புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் வருங்கால திட்டம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஜப்பானிய சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிள்களை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யபப்டும் என தகவல்கள் வெளியாகிறது. சுஸுகி நிறுவனம், தங்களின் புதிய 250 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்த ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள், அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இன்டர்மாட் மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சியிலோ (INTERMOT Motorcycle fair) அல்லது நவம்பரில் நடைபெறும் இஐசிஎம்ஏ ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யலாம்.

Image Courtesy: Rushlane

உயர்அதிகாரி கருத்து;

உயர்அதிகாரி கருத்து;

சுஸுகி ஆஸ்திரேலியாவின் உயர்அதிகாரி லூயிஸ் கிராஃப்ட், சுஸுகி ஜிக்சர் 250 அல்லது புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள்களை, இந்த இன்டர்மாட் மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சி மற்றும் நவம்பரில் நடைபெறும் இஐசிஎம்ஏ ஆட்டோ ஷோவிலும் அறிமுகம் செய்யும் என தெரிவித்தார்.

பேடன்ட் படங்கள்;

பேடன்ட் படங்கள்;

சுஸுகியின் புதிய மோட்டார்சைக்கிளின் பேடன்ட் (காப்புரிமை) படங்கள், ஆஸ்திரேலியாவில் வெளியாகியுள்ளது. இதனால், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள் முதலில் ஆஸ்திரேலியாவில் வெளியாகலாம்.

இந்தியாவில் மாற்றுபெயர்;

இந்தியாவில் மாற்றுபெயர்;

முழுவதுமாக ஃபேரிங் செய்யப்பட்ட சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, ஜிக்சர் 250 என பெயரிடப்படலாம்.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் 250 சிசி முதல் 300 சிசி செக்மென்ட் டூ வீலர்களில், சுஸுகிக்கு என தனி இடத்தை பிடிக்க உதவும் என எத்ரிபார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்250 மோட்டார்சைக்கிள், 2017 அறிமுகம் செய்யப்படலாம். இவை, இந்தியாவில் 2017 மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதர தகவல்கள்;

இதர தகவல்கள்;

சுஸுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிளின் ஃபிரேம், இந்தியாவில் விற்கப்படும் ஜிக்சர் 150 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட் டூரர் என அடையாளப்படுத்தப்படும் இந்த சுஸுகி ஜிக்சர் 250, 24 பிஹெச்பி முதல் 27 பிஹெச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும்.

போட்டி;

போட்டி;

சுஸுகி ஜிக்சர் 250 மோட்டார்சைக்கிள், ஹோண்டா சிபிஆர்250ஆர் மற்றும் கேடிஎம் ஆர்சி200 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

English summary
Suzuki Motorcycle would reveal its new GSX-R250 or Gixxer 250 in 2016. According to reports, Suzuki is all geared up for launch of its new 250cc motorcycle. It is said that, Gixxer 250 will be unveiled at the INTERMOT Motorcycle fair in October or the at EICMA in November this year. When launched in India, this fully-faired sports motorcycle may be renamed as Gixxer 250. To know more, check here...
Story first published: Saturday, October 1, 2016, 16:18 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos