ரியர் டிஸ்க் பிரேக் உடைய சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ரியர் டிஸ்க் பிரேக் வசதி கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர்...

புதிய சுஸுகி ஜிக்ஸெர்...

சுஸுகி நிறுவனம் தங்களின் ஜிக்ஸெர் பைக்கில் புதிய வேரியண்ட்டை அறிமுகம்.

ரியர் டிஸ்க் பிரேக் வசதி கொண்ட இந்த சுஸுகி ஜிக்ஸெர் பைக், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்தது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ரியர் டிஸ்க் பிரேக் வசதி கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் இஞ்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் செய்யபடவில்லை. புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக், 154.9 சிசி, சிங்கிள் சிலிண்டர், எஸ்ஓஹெச்ஸி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 14.6 பிஹெச்பியையும், 14 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ரியர் டிஸ்க் பிரேக் வசதி கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான் பின் சக்கரத்திற்கு பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக், ஒரு லிட்டருக்கு 45 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

இது, சுஸுகி நிறுவனம் தங்கள் நிறுவனத்திலேயே உருவாக்கிய எஸ்இபி எனப்படும் சுஸுகி ஈக்கோ பெர்ஃபார்மான்ஸ் தொழில்நுட்பத்தால் சாத்தியமாகிறது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக், 12 லிட்டர் கொள்ளளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

இதனால், ஒரு முறை முழு டேங்க் அளவிற்கு எரிபொருள் நிறப்பினால், சுமார் 540 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

புதிய டிஸ்க் பிரேக்;

புதிய டிஸ்க் பிரேக்;

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கினுடைய புதிய வேரியண்ட்டின், ரியர் வீலில் புதிய டிஸ்க் பிரேக் சேர்க்கபட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் முன் பக்கத்தில் உள்ள வழக்கமான டிஸ்க் பிரேக், டெலஸ்கோப்பிக் ஃபரண்ட் சஸ்பென்ஷன் உள்ளது.

இதன் பின் பக்கத்தில், மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட மேற்குறிப்பிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக உள்ளன.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் முன் சக்கரம் 100 செக்‌ஷன் யூனிட் என்ற அளவிலும், பின் சக்கரம் 140 செக்‌ஷன் யூனிட் என்ற அளவிலும் உள்ளது.

2 பக்க டயர்களும் 17-இஞ்ச் அல்லாய் வீல்களுடன் பொருத்தபட்டுள்ளது. மேலும், புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கொண்டுள்ளது.

ஜிக்ஸெர் - கிடைக்கும் வண்ணங்கள்;

ஜிக்ஸெர் - கிடைக்கும் வண்ணங்கள்;

ரியர் டிஸ்க் பிரேக் கொண்ட புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் வேரியண்ட், லஷ் கிரீன் / கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக், மெட்டாலிக் ட்ரைடன் புளூ / பியர்க் மிராஜ் வைட், கேண்டி சொனோமா ரெட் / கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் ஆகிய டியூவல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

ஜிக்ஸெர் எஸ்எஃப் - கிடைக்கும் வண்ணங்கள்;

ஜிக்ஸெர் எஸ்எஃப் - கிடைக்கும் வண்ணங்கள்;

ரியர் டிஸ்க் பிரேக் கொண்ட புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் வேரியண்ட், ஸ்டாண்டர்டாக பியர்ல் மிராஜ் ரெட் மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

மோட்டோ ஜிபி - கிடைக்கும் வண்ணங்கள்;

மோட்டோ ஜிபி - கிடைக்கும் வண்ணங்கள்;

ரியர் டிஸ்க் பிரேக் கொண்ட புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் மோட்டோ ஜிபி எடிஷன், மெட்டாலிக் டிரைடன் புளூ நிறத்தில் கிடைக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

ரியர் டிஸ்க் பிரேக் கொண்ட, புதிய சுஸுகி ஜிக்ஸெர், புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் மற்றும் மோட்டோ ஜிபி எடிஷன், இந்தியா முழுவதும் உள்ள சுஸுகி ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

ரியர் டிஸ்க் பிரேக் கொண்ட புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள், ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர், பஜாஜ் பல்சர் ஏஎஸ் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் மற்றும் யமஹா ஆர்15 ஆகிய பைக்குகளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலைகள்;

விலைகள்;

வேரியண்ட் - ஜிக்ஸெர்

விலை - ரூபாய் 79,726 எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)

வேரியண்ட் - ஜிக்ஸெர்

விலை - ரூபாய் 87,343 எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)

வேரியண்ட் - மோட்டோ ஜிபி எடிஷன்

விலை - ரூபாய் 88,857 எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

250சிசி ஜிக்ஸெர் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த சுஸுகி திட்டம்!

புதிய சுஸுகி ஜிக்ஸெர் முறைப்படி விற்பனைக்கு வந்தது- விபரம்

ஜிக்ஸெர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Suzuki has launched a new variant of the Gixxer with a rear disc brake. Engine and gearbox options remains same on the new Gixxer. New Suzuki Gixxer has same 154.9cc single cylinder SOHC engine, which produces 14.6bhp and 14Nm of torque. Suzuki Gixxer With Rear Disc Brake Prices starts at Rs. 79,726. To know more, check here...
Story first published: Friday, April 15, 2016, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X