சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி நிலை ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி நிலை மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது. இந்நிறுவனம், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிளை மிக ரகசியமான முறையில் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அப்படி இருந்தும், இதன் உற்பத்தி நிலை மாடலின் படங்கள் வெளியாகியுள்ளது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர்...

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர்...

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தது. சுஸுகி தயாரிப்புகளின் ரசிகர்களும் நீண்ட காலமாக இதற்காக காத்திருந்தனர். சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள் தான் இந்திய வாகன சந்தைகளில், தற்போது அறிமுகம் செய்ய சிறந்த பிரிமியம் மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி நிலை ஸ்பை படங்கள் வெளியாகியது. இந்த ஸ்பை படங்களில் ஏராளமான விவரங்கள் வெளியாகியுள்ளது. இதன் இணை மாடலான 1000சிசி சுஸுகி மோட்டார்சைக்கிளை போன்றே டிசைன் மொழி கொண்டுள்ளதால், இந்த புதிய மாடல் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் என்று அழைக்கப்படுகிறது.

தோற்றம்;

தோற்றம்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள், ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 மாடலை போன்றே, ஹெட்லைட் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. இதன் ரியர், சற்று எழும்பிய தோற்றம் கொண்டுள்ளது. மேலும், இது ஸ்பிலிட் சீட் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள், இதன் போட்டி மாடலை போன்றே டியூபுலார் ஃபிரேம் கொண்டுள்ளது. இதன் முன் பகுதியில் டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃபோர்க்கும், ரியர் பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன.

பிரேக்;

பிரேக்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள், பெரிய தோற்றம் கொண்ட பெட்டல் ரோட்டர் போல் காட்சி அளிக்கிறது. இது, சுமார் 300மில்லிமீட்டருக்கும் கூடுதலான விட்டம் கொண்டதாக இருக்கும்.

பிற விவரங்கள்;

பிற விவரங்கள்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள், பெரிய ப்யூவல் டேங்க் கொண்டுள்ளது. இதன் பெரிய வின்ட்ஸ்கிரீன், இதற்கு சரியான சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் போன்ற காட்சி அளிக்க வைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, இனாஸுமா 250 மாடலில் உள்ள அதே இஞ்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 40பிஹெச்பியை வெளிப்படுத்தும் இஞ்ஜின் தான் இந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்படலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்கள் அவ்வளவாக வெளியாகாத நிலை உள்ளது. இது, 2017 இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

விலை;

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-250ஆர் மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில், 2.5 லட்சம் ரூபாய் முதல் 3.5 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

ரூ.16 கோடிக்கு புதிய காரை வாங்கிய உலகின் பணக்கார விளையாட்டு வீரர் மேவெதர்!

புதியதோர் உலகு செய்ய வரும் ஐ-டேங்க் மூன்றுசக்கர ஸ்கூட்டர்!

மும்பையில் தீப்பிடித்து எரிந்த டட்சன் ரெடிகோ கார்... அடுத்த நானோவா என பீதி!

Spy Pics Credit ; www.iwanbanaran.com

English summary
Suzuki GSX-250R motorcycle's Production version Spy Pictures are revealed. New spy shots confirm that quarter-litre motorcycle will be called as GSX-250R, as it follows design language similar to its 1000cc big brother. This motorcycle features headlight and body graphics similar to that pf GSX-R 1000. To know more about Suzuki GSX-250R and its Spy Pics, check here...
Story first published: Monday, October 3, 2016, 18:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark