சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிள் மீது 50,000 ரூபாய் தள்ளுபடி

By Ravichandran

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிள் மீது 50,000 ரூபாய் தள்ளுபடி வழங்கபடுகிறது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிள் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் சூப்பர்பைக் உற்பத்தி செய்யும் நிறுவனம், தங்களின் 1 லிட்டர் அளவிலான மோட்டார்சைக்கிள் மீது 50,000 ரூபாய் சலுகை வழங்குகின்றனர். இதை தவிர, சுஸுகியின் எக்ஸ்குளுசிவ் மெர்சண்டைஸ்கள் மீதும் ஏராளமான சலுகைகள் வழங்கபடுகிறது. குஷிதானி ஆர்மர்ட் ரைடிங் ஜாக்கெட், 60,000 ரூபாய் என்ற ஈர்க்கும் விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

அனைத்து தள்ளுபடிகளும், சலுகைகளும் சுஸுகியின் அங்கிகரிக்கபட்ட சுஸுகி டீலர்ஷிப்களில் கிடைக்கும். இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை சுஸுகி நிறுவனம், சேல்ஸ்ஃபெஸ்ட் என்ற பெயரில் வழங்கி வருகின்றனர்.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிள், சுஸுகியின் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிள் ஆகும். இது சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 சூப்பர்பைக்கின் தழுவலை அதிக அளவில் கொண்டுள்ளது. இது, சுஸுகியின் மோட்டோஜிபி மற்றும் டபுள்யூஎஸ்பிகே போட்டிகளில் பங்கேற்கு பைக் போன்றே இருக்கும்.

தள்ளுபடி சலுகைகள் அறிமுகம் செய்யபடாத நிலையில், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிளின் விலை 12.25 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபட்டது. தற்போது இந்த 50,000 ரூபாய் சலுகை அறிவிக்கபட்ட நிலையில், இதன் விலை, 11.75 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

suzuki-gsx-s-1000-motorcycle-india-discounts-till-31st-march

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிள், 999சிசி, இன்லைன், 4-சிலிண்டர் லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 143.5 பிஹெச்பியையும், 106 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மோட்டார்சைக்கிளுக்கு, ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிசிஎஸ் எனப்படும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கபட்டுள்ளது.

சமீபத்தில் தான், சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், தங்களின் ஹயாபுசா சூப்பர்பைக் மீது, 2.38 லட்சம் ரூபாய் விலை குறைப்பை அறிவித்தனர். இந்த சூப்பர்பைக் இந்தியாவில், சிகேடி எனப்படும் கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் முறையில் விற்கபடுகிறது. இந்திய வாகன சந்தையில், சுஸுகி நிறுவனம், இன்னும் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளனர்.

Most Read Articles

English summary
Suzuki has announced Discounts and offers on their GSX-S 1000 motorcycle. Discounts worth Rs. 50,000 on this litre class motorcycle. Apart from this, there are several other offers on exclusive merchandise from Suzuki. All these discount and offers are applicable only until March 31, 2016, at all authorised Suzuki dealerships. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X