சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள் விரைவில் வெளியாகும்
சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் அடுத்த பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள் உருவாக்கி வருகின்றனர். 150 சிசி கொள்ளளவு கொண்ட இந்த மோட்டார்சைக்கிள், ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் என பெயரிடப்பட வாய்ப்புகள் உள்ள இந்த மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய அனைத்து வாகனங்களுக்கும், செயல்திறன் கூட்டப்பட்ட பெர்ஃபார்மன்ஸ் வடிவங்களும் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.
அவ்வகையில், சுஸுகி ஜிக்ஸெர் மாடலின் பெர்ஃபார்மன்ஸ் கூட்டப்பட்ட வடிவமான ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்;
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் என்ற பெயருக்கு ஏற்றவாறு, சுஸுகி ஜிக்ஸெர் மாடலின் பல்வேறு டிசைன் அம்சங்கள், இந்த ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் மாடலில் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. இது அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஸ்பை படங்கள்;
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர், உருமறைப்புடனும், லிவரியுடனும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது முதலில், இந்தோனேஷிய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

ஸ்டைல்;
ஸ்டைல் படி, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் மோட்டார்சைக்கிள், பெரிய ஜிஎஸ்எக்ஸ் மாடளைகளை போன்றே, கூர்மையான ஹெட்லேம்ப்கள் மற்றும் மடிப்புகள் உடைய வளைவுகள் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உடைய டபுள்-டிஸ்க் பிரேக்குகள் உடையதாக உள்ளது.

இஞ்ஜின்;
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள், ஜிக்ஸெர் மாடல்களில் உள்ள அதே 155 சிசி இஞ்ஜின் தான் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இஞ்ஜின், 14.6 பிஹெச்பியையும், அதிகப்படியாக 14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. எனினும், இந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் மோட்டார்சைக்கிளில் இந்த இஞ்ஜின், அதிக திறன் வெளிப்படுத்தும் வகையில் ரீ-டியூன் செய்யப்படும்.

பிற தன்மைகள்;
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள், லிக்விட்-கூலிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். இதன் பொருள் யாதெனில், சுஸுகியின் புதிய ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள், முந்தைய ஜிக்ஸெர் மாடலை காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும்.
ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளின் படங்கள் தற்போது இணையத்தில் உலா வருவது, மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுக்கு உற்சாகமான செய்தி ஆகும்.

அறிமுகம்;
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள், உலகளவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும். எனினும், இந்த சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-150ஆர் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளை, ஜப்பானின் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யுமா, இல்லையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம், 150 செக்மென்ட்டில், சுஸுகி ஜிக்ஸெர் மாடல், பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ரியர் டிஸ்க் பிரேக் உடைய சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்தியாவில் அறிமுகம்
ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் வசதி கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் இந்தியாவில் அறிமுகம்
சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடலில் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம்


Click it and Unblock the Notifications








