டிரையம்ஃப் பைக்குகளை வாங்கிய சென்னை டிடிகே குழும அதிபர்கள்

By Meena

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற ஒன்று. ட்ரையம்ப் மாடல் பைக் வைத்திருந்தால், சமூகத்தில் அந்தஸ்து கூடுவதும் அதன் மீதான ஈர்ப்புக்கு காரணம்.

கிளாசிக்கான பைக்குகளுக்கு பேர் போன அந்த நிறுவனம் அதன் பிரபலமான பல மாடல்களை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒரு மாடல் ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் ஆர்.

டிரையம்ஃப் பைக்

மற்ற வண்டிகள் மாஸ்னா.... இந்த மாடல் பக்கா மாஸ்... லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த வண்டி 1200 சிசி மாடல் பைக். எஞ்சினைப் பொருத்தவரை 96 பிஎச்பி சக்தியையும், 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் இதில் உள்ளது. மொத்தம் 203 கிலோகிராம் எடை கொண்ட ஹல்க் வண்டி இது. 6 கியர்கள் உள்ளன.

பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதல்ல... என்ற பாணியில் இந்த பைக்கைச் சொல்லலாம். இந்தியாவில் இதன் விலை ரூ.10 லட்சத்துக்கும் அதிகம்.

சரி விஷயம் என்னவென்றால், அரிய மோட்டார் சைக்கிள்களை வாங்கிப் பாதுகாக்கும் பைக் ஆர்வலர்களான சென்னையை சேர்ந்த டி.டி.ரகுநாதன், டி.டி.வரதராஜன் ஆகியோர் ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் ஆர் மாடலை புதிதாக வாங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது அரிய வாகனங்களைக் காட்சிப்படுத்தவற்காக தனித்தனி கேரேஜ்களை வைத்துள்ளனர்.

அதில் பழைய மாடல் பைக்குகளில் இருந்து லிமிடெட் எடிசனாக விற்பனை செய்யப்பட்ட வண்டிகள் வரை காட்சிக்கு நிறுத்தியுள்ளனர். அந்த வரிசையில் புதிதாக ட்ரையம்ப் மாடல் பைக்கையும் தமிழகத்தில் உள்ள ஷோ ரூமில் இருந்து வாங்கியுள்ளனர்.

அவர்களுக்கு வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் இந்தியாவின் மேலாண் இயக்குநர் விமல் சம்ப்ளி கலந்து கொண்டு ரகுநாதன், வரதராஜன் ஆகியோரிடம் சாவிகளை ஒப்படைத்தார்.

Most Read Articles
English summary
T.T. Raghunathan & Varadarajan Buy The Triumph Thruxton R.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X