விற்பனையில் இந்தியாவின் டாப் 10 பைக்குகள்... பட்டியலில் ஏறிய பஜாஜ் வி15!

By Saravana

கடந்த ஏப்ரல் மாதத்தில் பைக்குகள் விற்பனை மிதமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. புதிய வரவுகள் வந்தாலும், சில ஜாம்பவான் மாடல்கள் தங்களது இடத்தை கெட்டியாக பற்றிக் கொண்டு சாதித்து வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் வி15 பைக் கடந்த மாத விற்பனையின்படி, டாப் 10 பட்டியலில் நுழைந்து அசத்தியிருக்கிறது. அதேபோன்று, கடந்த 5 மாதங்களாக பட்டியலுக்கு வெளியில் காத்துக்கிடந்த ஹோண்டா ட்ரீம் பைக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. பஜாஜ் வி15

10. பஜாஜ் வி15

கடந்த மாதம் 10வது இடத்தை பஜாஜ் வி15 பைக் பெற்றது. வித்தியாசமான வடிவமைப்பு, 1971ம் ஆண்டு போரில் ஹீரோவாக வர்ணிக்கப்படும் ஓய்வளிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. கடந்த மாதத்தில் 24,057 பஜாஜ் வி15 பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. இதன் விற்பனை பஜாஜ் ஆட்டோவிற்கு முக்கிய பங்களிப்பையும், உற்சாகத்தையும் தந்துள்ளது.

 09. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

09. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

கடந்த மாதத்தில் 9வது இடத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. ஏப்ரலில் 28,567 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையைவிட தற்போது இதன் விற்பனை 71 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆளுமையான தோற்றம், சக்திவாய்ந்த எஞ்சின், சவுகரியமான விலை போன்றவை இந்த பைக்கிற்கான வரவேற்பை கூடுதலாக்கியிருக்கிறது.

08. ஹோண்டா ட்ரீம்

08. ஹோண்டா ட்ரீம்

கடந்த 5 மாதங்களுக்கு பின் மீண்டும் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது ஹோண்டா ட்ரீம் பைக். கடந்த மாதத்தில் 32,503 ட்ரீம் வரிசை பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. சிறப்பான எஞ்சின், மைலேஜ், தோற்றம், குறைவான விலை போன்றவை இந்த பைக்கிற்கு வலு சேர்க்கின்றன. அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையை விட தற்போது விற்பனை 7 சதவீதம் குறைந்துவிட்டது.

07. பஜாஜ் பல்சர்

07. பஜாஜ் பல்சர்

பல்சர் பிராண்டுக்கு இளைஞர்கள் என்றில்லாமல், நடுத்தர வயதினர் மத்தியிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், விற்பனை மிக சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் 50,419 பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. செயல்திறன், தோற்றம், மைலேஜ், விலை என அனைத்திலும் நிறைவை தருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலைவிட தற்போது 2 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளது.

 06. ஹோண்டா சிபி ஷைன்

06. ஹோண்டா சிபி ஷைன்

பட்டியலில் 6வது இடத்தில் ஹோண்டா ஷைன் பைக் உள்ளது. கடந்த மாதத்தில் 52,751 ஷைன் பைக்குகள் விற்பனையாகிருக்கின்றன. அருமையான டிசைன், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின், கைக்கு தோதுவான விலை போன்றவை இந்த பைக்கிற்கு நிலையான விற்பனையை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலைவிட தற்போது விற்பனை 28 சதவீதம் வரை குறைந்துவிட்டதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

05. பஜாஜ் சிடி 100

05. பஜாஜ் சிடி 100

கடந்த மாதத்தில் 66,409 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. அதிக மைலேஜ், குறைந்த விலை, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்காக வலம் வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, தற்போது விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

04. ஹீரோ கிளாமர்

04. ஹீரோ கிளாமர்

கடந்த மாதத்தில் 66,756 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், மென்மையான எஞ்சின், ஹீரோ பிராண்டின் நம்பகத்தன்மை இந்த பைக்கிற்கு வலு சேர்க்கும் அம்சங்கள். கடந் மாதம் விற்பனை 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

பட்ஜெட் விலையில் சற்றே பகட்டான வண்டியாக தோற்றத்தை வழங்கும் பைக். கடந்த மாதத்தில் 98,976 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. விலை, மைலேஜ் ஆகியவற்றிலும் சிறந்த மாடல். அதேநேரத்தில், விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது.

 02. ஹீரோ டீலக்ஸ்

02. ஹீரோ டீலக்ஸ்

குறைவான விலையில் சிறந்த பைக் மாடல். கடந்த மாதத்தில் 1,16,567 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. கடந்த மாதம் விற்பனை 32 சதவீதம் உயர்ந்திருப்பது ஹீரோவுக்கு உற்சாகத்தை தரும் விஷயம்.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

நீண்ட காலமாக மக்களின் பெரும் அபிமானத்தை பெற்ற பைக் மாடல் ஸ்பிளென்டர். பல புதிய மாடல்கள் வந்து கொண்டிருந்தாலும், ஸ்பிளென்டர் மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த மாதத்தில் 2,24,238 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது இப்போது விற்பனை 14 சதவீதம் உயர்ந்துள்ளது.

Most Read Articles
English summary
Top 10 Best selling motorcycles in April 2016.
Story first published: Friday, May 20, 2016, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X