விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள்... நீண்ட நாட்களுக்கு பின் பட்டியலில் டிவிஎஸ் வீகோ

Written By:

ஆண்டு கடைசி என்ற காரணத்தால், கடந்த மாதம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சுணக்கம் காணப்பட்டது. இருப்பினும், ஒரு சில மாடல்கள் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்ய தவறவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் பட்டியலில் தொற்றியது. கடந்த மாதத்தில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஸ்கூட்டர் மாடல்களை இப்போது பார்க்கலாம்.

 10. டிவிஎஸ் வீகோ

10. டிவிஎஸ் வீகோ

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ஓர் ஆண்டு கழித்து பட்டியலில் 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாததத்தில் 6,369 வீகோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 7 சதவீதம் குறைவு. ஜுபிடர் வந்ததற்கு பிறகு வீகோ மவுசு குறைந்ததே காரணம்.

09. ஹோண்டா ஏவியேட்டர்

09. ஹோண்டா ஏவியேட்டர்

கடந்த மாதத்தில் 8,622 ஏவியேட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டு டிசம்பரைவிட 13 சதவீதம் விற்பனை குறைந்தது. ஹோண்டா ஸ்கூட்டர் என்ற இமேஜ் இதன் பக்கபலமாக இருக்கிறது.

08. சுஸுகி அக்செஸ்

08. சுஸுகி அக்செஸ்

கடந்த மாதத்தில் 12,018 அக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. பலரின் விருப்பமான இந்த 125சிசி ஸ்கூட்டரின் விற்பனை கடும் சந்தைப் போட்டியால் குறைந்து வருகிறது. ஆம், கடந்த டிசம்பரைவிட கடந்த மாதத்தில் 25 சதவீதம் விற்பனை குறைந்தது. செயல்திறன் மிக்க ஸ்கூட்டர் என்பது இதன் பலம்.

07. யமஹா ஃபேஸினோ

07. யமஹா ஃபேஸினோ

யமஹாவின் ஸ்டைலான ஸ்கூட்டர் மாடலாகவும், விற்பனையில் முக்கிய பங்களிப்பையும் வழங்கி வருகிறது ஃபேஸினோ. கடந்த மாததத்தில் 14,437 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியது. டிசைன்தான் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

06. ஹீரோ டூயட்

06. ஹீரோ டூயட்

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டாவின் கொட்டத்தை அடக்கவும், ஹீரோ ஸ்பிளென்டரின் நம்பர்- 1 இடத்தை தக்க வைக்கும் ஹீரோ புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அதில், சமீபத்தில் வந்த ஹீரோ டூயட் பலரின் கவனத்தை ஈர்த்திருப்பது விற்பனை எண்ணிக்கை மூலமாக தெரிய வருகிறது. கடந்த மாதத்தில் 14,893 ஹீரோ டூயட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

05. ஹோண்டா டியோ

05. ஹோண்டா டியோ

ஹோண்டா பிராண்டின் ஸ்டைலான ஸ்கூட்டர். இளம் வயதினர் மிகவும் விரும்பும் மாடலாக வலம் வருகிறது. கடந்த மாதத்தில் 15,540 ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டு டிசம்பரைவிட விற்பனை 13 சதவீதம் குறைந்தது.

04. ஹீரோ ப்ளஷர்

04. ஹீரோ ப்ளஷர்

ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர் 4வது இடத்தை பெறறது. பெண் வாடிக்கையாளர் விரும்பும் ஸ்கூட்டர் மாடல். கடந்த மாதத்தில் 15,540 ப்ளஷர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டு டிசம்பரைவிட இப்போது விற்பனை 51 சதவீதம் குறைந்தது. காரணம், ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிந் கவனத்தை ஈர்த்திருப்பதே எனலாம்.

03. டிவிஎஸ் ஜுபிடர்

03. டிவிஎஸ் ஜுபிடர்

விற்பனையில் மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்து வரும் மாடல் டிவிஎஸ் ஜுபிடர். கடந்த மாதம் 47,217 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரைவிட தற்போது விற்பனை 33 சதவீதம் உயர்ந்துள்ளது. தோற்றம், வசதிகள், செயல்திறன், மைலேஜ் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் அபிமானத்தை பெற்றுள்ளது.

02. ஹீரோ மேஸ்ட்ரோ

02. ஹீரோ மேஸ்ட்ரோ

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடல் என்பதுடன், ஹீரோவின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த ஸ்கூட்டரின் விற்பனையில் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த மாதத்தில் 52,084 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

 01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

யாரும் தொட முடியாத விற்பனை உச்சத்தில் அமர்ந்திருக்கிறது ஹோண்டா ஆக்டிவா. கடந்த மாதத்தில் 1,74,154 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஆனாலும், விற்பனை தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவு முகத்தில் இருக்கிறது. 2014ம் ஆண்டு டிசம்பரைவிட தற்போது 4 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஆனால், புத்தாண்டில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்பலாம். டிசைன், செயல்திறன், ஸ்மூத்தான எஞ்சின், மறுவிற்பனை மதிப்பு என அனைத்திலும் தன்னிகரில்லாத ஸ்கூட்டர்.

 
English summary
Top 10 Best selling scooters in Dec 2015.
Story first published: Saturday, January 23, 2016, 11:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark