விற்பனையில் டாப் 10 டூ வீலர்கள்... ஜிவ்வென்று உயர்ந்த டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனை!

By Saravana Rajan

புதிய இருசக்கர வாகன மாடல்கள் வந்து கொண்டிருந்தாலும், பழைய மாடல்களின் ஆதிக்கம் சந்தையில் தொடர்வது கடந்த மாத விற்பனை பட்டியல் மூலமாக நிரூபணமாகியிருக்கிறது. கடந்த மாதத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனை ஜிவ்வென்று உயர்ந்திருக்கிறது.

மேலும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ஆதிக்கம் தொடர்வது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த விற்பனையில் முன்னிலை வகித்தாலும், அந்த முதலிடத்திற்காக மாதா மாதம் போராடும் நிலைக்கு ஹீரோ மோட்டோகார்ப் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த மாத நிலவரப்படி, விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 10. டிவிஎஸ் ஜூபிடர்

10. டிவிஎஸ் ஜூபிடர்

இந்திய இருசக்கர வாகன சந்தையின் மிகவும் வெற்றிகரமான மாடல் என்ற பெருமையை டிவிஎஸ் ஜுபிடர் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. கடந்த மாதத்தில் 43,867 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைனில் சிறப்பாக இருப்பதோடு, நல்ல மைலேஜ், செயல்திறன் வழங்கும் எஞ்சினும் இதற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

09. பஜாஜ் பல்சர்

09. பஜாஜ் பல்சர்

இளைஞர்களின் விருப்பமான பைக் மாடலாக வலம் வரும் பல்சர் 9வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 46,307 பல்சர் பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில், கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இது 13 சதவீதம் குறைவு. இருப்பினும், புதிய பல்சர் மாடல்கள் வர இருப்பதால், இந்த தொய்வு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த தொழில்நுட்பமும், டிசைனும் கொண்ட பல்சர் பைக்குகள் போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் கிடைப்பதே வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

08. பஜாஜ் சிடி 100

08. பஜாஜ் சிடி 100

கடந்த மாதம் பஜாஜ் சிடி100 பைக் 8வது இடத்தை பிடித்தது. அதிக மைலேஜ் தரும் குறைவான விலை பைக் என்பது இதற்கு வலு சேர்க்கிறது. கடந்த மாதத்தில் 51,893 சிடி100 பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தைவிட விற்பனை 22 சதவீதம் குறைந்துவிட்டது.

07. ஹோண்டா சிபி ஷைன்

07. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி மார்க்கெட்டில் நம்பகமான பைக் ஹோண்டா சிபி ஷைன். மென்மையான ஓட்டுதல் அனுபவம், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் என்ற பெருமைக்குரிய ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் விற்பனை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் 56,818 சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இது 27 சதவீதம் குறைவு. 125 சிசி பைக் மார்க்கெட்டில் ஹோண்டா கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

ஹீரோ கிளாமர் ஸ்திரமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாத்தில் 74,590 கிளாமர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு மே மாதத்தைவிட 28 சதவீதம் அதிகம். அதிக மைலேஜ் தரும் சிறந்த எஞ்சின் கொண்டிருப்பதோடு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கும் இதற்கு வலு சேர்க்கிறது.

05. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

05. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. புதிய வரவான இதன் 4 ஸ்ட்ரோக் எஞ்சின் மாடலால், விற்பனை சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதத்தில் 75,406 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இது 19 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த போக்குவரத்து சாதனம் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு சிறப்பான விற்பனை பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் 97,882 பேஷன் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதத்தைவிட தற்போது விற்பனை 6 சதவீதம் குறைவு. டிசைன், சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ் போன்றவை இதன் சிறப்புகளாக இருக்கின்றன.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் 1,12,273 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. மிக குறைவான விலையில் கிடைக்கும் அருமையான 100சிசி பைக் மாடல் என்பது இதன் பலம். மேலும், கடந்த ஆண்டு மே மாதத்தைவிட, தற்போது விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

 02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

மீண்டும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரிடம் முதலிடத்தை பறிகொடுத்து தவிக்கிறது ஹீரோ ஸ்பிளென்டர். கடந்த மாதத்தில் 2,07,010 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. மார்க்கெட்டில் மிகவும் நம்பகமான பைக் மாடல். மறு விற்பனை மதிப்பிலும் சிறந்து விளங்குகிறது.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

இந்தியாவின் தன்னிகரற்ற போக்குவரத்து சாதனமாக ஹோண்டா ஆக்டிவா மாறியிருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருப்பதோடு, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதால், ஆண், பெண் இருபாலருக்கும் சிறப்பான சாய்ஸ். இளைஞர்கள், நடுத்தர வயதினர், வயோதிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களுக்கும், ஏன் கிராமப்புறங்களுக்கும் கூட மிகச் சிறப்பான போக்குவரத்து சாதனம் ஹோண்டா ஆக்டிவா. அதுவும் சரியான விலையில். இதனால், ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த மாதத்தில் 2,37,317 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு மே மாதத்தைவிட 26 சதவீதம் கூடுதல்.

Most Read Articles
English summary
Top 10 Best Selling Two-Wheelers In May 2016.
Story first published: Monday, June 27, 2016, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X