விற்பனையில் றெக்கை கட்டி பறக்கும் ஹோண்டா ஆக்டிவா... முந்த முடியாமல் தவிக்கும் ஸ்பிளென்டர்!

Written By:

ஏப்ரல்- ஜூன் இடையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகியிருக்கும் இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளென்டர் இடையே முதலிடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவியது.

இதுதவிர, வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவுடன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த இருசக்கர வாகன மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. டிவிஎஸ் ஜுபிடர்

10. டிவிஎஸ் ஜுபிடர்

டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் பிடித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1,33,268 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் டிவிஎஸ் ஜுபிடர் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 109சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7.8பிஎச்பி பவரையும், 8என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 56 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.56,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 09. பஜாஜ் பல்சர்

09. பஜாஜ் பல்சர்

இந்தியாவின் பட்டித்தொட்டியெங்கும் புகழடைந்திருக்கும் பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பிராண்டு 9வது இடத்தை பிடித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு விற்பனை நிலவரப்படி, மொத்தம் 1,40,520 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், செயல்திறனில் பல்சர் இளைய சமுதாயத்தினரை கவர்ந்த பிராண்டாக உள்ளது.

08. பஜாஜ் சிடி100

08. பஜாஜ் சிடி100

இந்த பட்டியலில் 8வது இடத்தை பஜாஜ் சிடி100 பைக் பெற்றிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1,61,351 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைவான விலையில், அதிக மைலேஜ் தரும் பைக் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

07. ஹோண்டா ஷைன்

07. ஹோண்டா ஷைன்

125சிசி மார்க்கெட்டில் ஹோண்டா சிபி ஷைன் பைக்கிற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1,83,855 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. மென்மையும், செயல்திறனும் ஒருங்கே பெற்றிருப்பதும், டிசைனும் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயங்கள்.

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஒரே மொபட் மாடலான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 4 ஸ்ட்ரோக் மாடலும் விற்பனையை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2,17,050 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. விலை குறைவான, எளிதான போக்குவரத்து சாதனம் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

05. ஹீரோ கிளாமர்

05. ஹீரோ கிளாமர்

பட்டியலில் 5வது இடத்தை ஹீரோ கிளாமர் பெற்றிருக்கிறது. 125சிசி மார்க்கெட்டில் விற்பனையில் முதன்மையான மாடலாகவும் ஹீரோ கிளாமர் முன்னிறுத்திக்கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2,21,694 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், நம்பகமான எஞ்சின் ஆகியவை இதன் பலம்.

04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

விற்பனை பட்டியலில் 4வது இடத்தை ஹீரோ பேஷன் பிடித்துள்ளது. இடையில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், அவற்றை சமாளித்து தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வருகிறது ஹீரோ பேஷன். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2,73,497 பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், நம்பகமான எஞ்சினை பெற்றிருக்கும் மற்றொரு ஹீரோ நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல் என்பது இதற்கு வலு சேர்க்கின்றன.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

ஹீரோ டீலக்ஸ் பைக் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3,35,326 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. குறைவான விலையில் கிடைக்கும் அருமையான பைக் என்பதுடன், ஹீரோ பிராண்டின் மீதான நம்பகத்தன்மையும் இந்த பைக்கிற்கு சிறப்பான விற்பனையை கொடுத்து வருகிறது.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

ஹீரோ மோட்டோகார்ப் வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் மாடல் என்பதுடன், இந்தியர்களின் மனம் கவர்ந்த பைக் மாடல். ஸ்பிளென்டர் பெயருக்கு தனி மதிப்பு உள்ளது. அதனை தொடர்ந்து விற்பனையில் நிரூபித்து காட்டி வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 6,35,857 பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. ஆனால், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவாவிடம் முதலிடத்தை இழந்து வருவது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது.

 01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

இந்த ஒரு மாடலை வைத்து தனது நேர் போட்டியாளரான ஹீரோவை அலற விட்டு வருகிறது ஹோண்டா. ஆம், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஹோண்டா ஆக்டிவாதான் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 மாடல். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 6,97,938 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைனில் அசத்தல், செயல்திறனில் பட்டையை கிளப்பி வரும் ஆக்டிவாதான் நவீன இந்தியாவின் மிகச் சிறந்த இருசக்கர வாகனமாக மாறியிருப்பது விற்பனையின் மூலமாக தெரிய வருகிறது.

  
English summary
Top 10 Selling Two-Wheelers In The First Quarter Of Financial Year 2016.
Story first published: Wednesday, July 20, 2016, 15:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark