பட்ஜெட் விலையில் டாப்-5 பைக்குகள் - முழு விவரம்

By Ravichandran

இந்தியாவில் 2 வீலர் செகமென்ட்டானது மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கிறது. இந்த போட்டியினை சமாளிக்க ஒவ்வொரு 2 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களால் ஆன சிறந்த தயாரிப்புகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஏராளமான 2 வீலர்களில் இருந்து, பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் இந்த பட்டியல், விலை, எரிபொருள் திறன், ரைடிங் எளிமை, மற்றும் விற்பனைக்கு பிந்தைய விலை மலிவான சர்வீஸ் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தயாரிக்கபட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களில், உங்கள் டிரைவ்ஸ்பார்க் மதிப்பீட்டின் படி, எந்த நிறுவனங்களின் எந்த மாடல்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது என வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

5) ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்;

5) ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹீரோ ஸ்பிளென்டர், பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் பட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ளது.

இது இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது. ஹீரோ நிறுவனம், ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் என்ற பெயரில், ஸ்பிளென்டர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஒரு லிட்டருக்கு 102.50 கிலோமீட்டர் என்ற அபார மைலேஜ் வழங்கும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் தான், உலகிலேயே மிக அதிகமான எரிபொருள் திறன் கொண்ட பைக் என ஹீரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்கள் - முழு விவரம்

இதில் உள்ள i3s தொழில்நுட்பத்தினால் (i3s technology) தான், இத்தகைய மைலேஜ் வழங்க முடிவதாக கூறப்படுகிறது. இதன் படி, நீண்ட நேரத்திற்கு ஐட்லிங் நிலையில் இருந்தால், இதன் இஞ்ஜின் தானாக ஷட் செய்து கொள்கிறது. மேலும், இதை ரீஸ்டார்ட் செய்ய, கிளட்ச் லிவரை லேசாக அழுத்தினாலே, இந்த பைக் எளிமையாக ரீஸ்டார்ட் ஆகிவிடுகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கிற்கு, 97.2 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 8.24 பிஹெச்பியையும், 8.05 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த 97.2 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த மாடலை விளக்கி கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. இதற்கு மாற்றாக, 110 சிசி கொண்ட இஞ்ஜினை பொருத்தி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

விலை, மைலேஜ்;

விலை, மைலேஜ்;

மைலேஜ் ; ஒரு லிட்டருக்கு 102.50 கிலோமீட்டர் (ஹீரோ நிறுவனத்தின் அறிவிப்பு)

விலை ; 50,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

4) டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+;

4) டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+;

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+, பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கொஞ்ச காலமாக இந்திய வாகன சந்தைகளில் விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+, பெர்ஃபார்மனஸ் விஷயத்திலும் சாதித்து காட்டியுள்ளது.

உயர்தரமான டிசைன் கொண்ட இது, நல்ல அழகிய தோற்றம் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்கள் - முழு விவரம்

டிசைன் மற்றும் தோற்றம் உள்ளிட்ட விஷயத்தை தாண்டி, டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக், நல்ல செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், இது தான் இந்தியாவின் சிறந்த 110 சிசி பைக்காக உள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக், 109.7 இஞ்சின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 8.28 பிஹெச்பியையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

விலை, மைலேஜ்;

விலை, மைலேஜ்;

மைலேஜ் ; ஒரு லிட்டருக்கு 86 கிலோமீட்டர்

விலை ; 44,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

3) பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்

3) பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ், பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது.

உலகின் மைலேஜ் சேம்பியன் என்ற (world's mileage champion) என்ற டேக்லைன் கொண்ட பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் தான், இந்தியாவின் மிகவும் பழமையான மைலேஜ் பெர்ஃபார்மனஸ் பைக் ஆகும்.

அல்லாய் வீல்கள் மற்றும் கிராஃபிக் ஸ்டிக்கர்களுடனும், புதிய டிசைனுடனும் மேம்படுத்தப்பட்ட இது, முன்பை விட இப்போது கூடுதல் ஈர்ப்பு தன்மை கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்கள் - முழு விவரம்

பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ், தான் மிக அகலமான டயர் ரேஞ்ச்-சையும், இதன் கேட்டகரியில் மிக நீண்ட சீட் உடையதாக உள்ளது. பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ், தற்போது எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடனும் வருகிறது.

பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் பைக்கிற்கு 102 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 8.08 பிஹெச்பியையும், 8.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை, மைலேஜ்;

விலை, மைலேஜ்;

மைலேஜ் ; ஒரு லிட்டருக்கு 96.9 கிலோமீட்டர்

விலை ; 43,241 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

2) ஹோண்டா நவி;

2) ஹோண்டா நவி;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் தயாரித்து வழங்கும் ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர், பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது.

வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான டிசைன் கொண்ட ஹோண்டா நவி, அனைவருக்கும் பிடித்த மாதிரியான பைக் அல்ல. ஆனால், இதன் நகைச்சுவையான மற்றும் வேடிக்கை அமைப்பு, ஏராளமான மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்கள் - முழு விவரம்

ஹோண்டா நிறுவனம், இந்த ஹோண்டா நவி பைக், அறிமுகம் செய்யபட்ட முதல் மாதத்திலேயே சுமார் 10000 வாகனங்களை விற்றுள்ளது. இதில் இருந்து ஹோண்டா நவி பைக், மக்களிடையே எவ்வளவு ஆர்வத்தை தூண்டியுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா நவி பைக், பல்வேறு வகையிலான கஸ்டமைசேஷன் தேர்வுகளுடனும் கிடைக்கிறது.

ஹோண்டா நவி பைக், 109.19 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 7.83 பிஹெச்பியையும், 8.96 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும.

விலை, மைலேஜ்;

விலை, மைலேஜ்;

மைலேஜ் ; ஒரு லிட்டருக்கு 42 - 52 கிலோமீட்டர்

விலை ; 39,500 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

1) பஜாஜ் சிடி100பி;

1) பஜாஜ் சிடி100பி;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வழங்கும் பஜாஜ் சிடி100பி பைக், பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்களின் பட்டியலில் 1-ஆம் இடத்தில் உள்ளது.

பஜாஜ் சிடி100பி பைக் தான், தற்போதைய நிலையில், இந்தியாவிலேயே மிகவும் விலை குறைந்த பைக் ஆகும். இதன் டிசைன் சிறந்தவற்றில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதன் கிராஃபிக்ஸ் மற்றும் பிளாக் எக்ஹாஸ்ட் பைப்புடன் இது நன்றாகவே காட்சியளிக்கிறது.

பட்ஜெட் விலையில் டாப்-5 2 வீலர்கள் - முழு விவரம்

பஜாஜ் சிடி100பி பைக்கிற்கு 99.27 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 8.08 பிஹெச்பியையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

விலை, மைலேஜ்;

விலை, மைலேஜ்;

மைலேஜ் ; ஒரு லிட்டருக்கு 90 கிலோமீட்டர்

விலை ; 31,485 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

உயரம் குறைவானவர்கள் எளிதாக ஓட்டுவதற்கான டாப் - 5 ஸ்கூட்டர்கள்!

டாப்-10 தொடர்புடைய செய்திகள்

டாப்-5 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Two-wheeler commuter segment is competitive in India. Hence, every manufacturer wants to offer their best product. Some of these elements which help this segment are pricing, fuel efficiency, ease of riding and cheaper post sales service. We are presenting you the list of top five pocket-friendly bikes in India currently. To know more about these Budget Friendly Bikes, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X