இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் ரெடி!!

By Saravana

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை புனே நகரை சேர்ந்த டார்க் உருவாக்கி வருவது குறித்து ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் பைக்கை தயாரிப்பதற்கான நிதி ஆதாரத்தை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.

ஓலா கேப் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் மற்றும் இதர தொழிலதிபர்கள் இந்த புதிய பைக்கை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கான நிதி ஆதாரத்தை அளித்துள்ளனர். இந்த அட்டகாசமான இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாதிரி மாடல்

மாதிரி மாடல்

டார்க் நிறுவனம் துவங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. ஏற்கனவே யமஹா எஃப்இசட்16 பைக்கை எலக்ட்ரிக் பைக்காக மாற்றி காட்டி அசத்தியிருந்தனர். மேலும், யமஹா எஃப்இசட்16 பைக்கின் எஞ்சினை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், சில சிறிய மாற்றங்கள் மற்றும் வெல்டிங் செய்து பேட்டரியையும், மின்மோட்டாரையும் பொருத்தினர்.

 கியர்பாக்ஸ் இல்லை

கியர்பாக்ஸ் இல்லை

அந்த பைக்கில் கியர்பாக்ஸ் இல்லை என்பதால், பேட்டரியை பொருத்துவதற்கான இடவசதி எளிதாக கிடைத்தது. அத்துடன், இதனை ஓட்டியவர்கள், நகர்ப்புறத்துக்கு ஏற்ற அட்டகாசமான பைக் என்று கருத்து தெரிவித்தனர். இதனால், டார்க் நிறுவனத்தின் உற்சாகத்துடன் அடுத்தக் கட்ட பணிகளை செய்தனர்.

 மாடல் விபரம்

மாடல் விபரம்

பேட்டரியில் இயங்கும் விதத்தில் மாற்றப்பட்ட, யமஹா எஃப்இசட்16 எலக்ட்ரிக் பைக்கை பல்வேறு கட்டங்களில் சோதனை செய்து, அடுத்ததாக சொந்த வடிவமைப்பில் டி6எக்ஸ் என்ற பெயரில் புதிய மின்சார ஸ்போர்ட்ஸ் பைக்கை தயாரித்து வருகின்றனர்.

 புரோட்டோடைப் ரெடி

புரோட்டோடைப் ரெடி

டார்க் டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கான 5 புரோட்டோடைப் மாடல்கள் தயாராகிவிட்டனவாம். மேலும், தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை பெறும் முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

நிதி ஆதாரம்

நிதி ஆதாரம்

இதனிடையே, ஸ்டார்ட் அப் நிறுவனமான டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு ஓலா கேப் இணை நிறுவனர்களான பவிஷ் அகர்வால் மற்றும் அன்கித் பட்டி ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஏஞ்சல் ஃபண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து டார்க் நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்துள்ளது.

ஆலை

ஆலை

நிதி ஆதாரம் கிடைத்ததைதொடர்ந்து, புனேயில் புதிய ஆலையை அமைத்து டி6எக்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகளை முழு உத்வேகத்துடன் டார்க் நிறுவனத்தார் துவங்கியிருக்கின்றனர்.

வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

ஏற்கனவே ஐலே ஆஃப் மேன் டிடி மற்றும் டிடிஎக்ஸ்- ஜிபி சீரிஸ் போன்ற போட்டிகளில் டார்க் நிறுவனத்தின் மின்சார ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போடியம் ஏறும் அளவுக்கு சாதித்து காட்டியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, தற்போது தயாரிப்பு நிலையை எட்ட இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டார்க் மின்சார ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஜிபிஎஸ் வசதி, மொபைல்போன் சார்ஜ் வசதி உள்ளிட்ட கூடுதல் சிறப்பம்சங்களை சேர்க்க டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

சார்ஜ் நிலையங்கள்

சார்ஜ் நிலையங்கள்

சென்னை, பெங்களூர், டெல்லி, புனே ஆகிய நகரங்களில் தங்களது பைக்கிற்கான சார்ஜ் நிலையங்களை ஏற்படுத்தவும் டார்க் மோட்டார்சைக்கிள் திட்டமிட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

டார்க் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 40 கிமீ தூரம் முதல் அதிகபட்சமாக 70 கிமீ தூரம் வரை செல்லும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tork Motorcycles raises funds from Ola founders.
Story first published: Monday, April 18, 2016, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X