டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அக்டோபர் 18-ல் அறிமுகம்

Written By:

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தங்களின் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அக்டோபர் 18-ல் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. இந்திய வாகன் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களும், இந்தியாவில் தங்களின் தடத்தை பத்திது வருகிறன்றனர்.

இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஆச்சர்யம்;

ஆச்சர்யம்;

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், சமீபத்தில் நடந்து முடிந்த 2016 இன்டர்மோட் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தபட்டது. சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாத காலகட்டத்தில், இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது மிகவும் ஆச்சர்யத்திற்கு உரிய விஷயமாகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு, 900 சிசி பேரலல்-ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 54பிஹெச்பியையும், அதிகப்படியாக 80 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

ஃபிரேம்;

ஃபிரேம்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு, டிரையம்ஃப் போனிவில் டி120 மோட்டார்சைக்கிளின் ஃபிரேம் உபயோகிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளில், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட்-பை-வயர் திராட்டில், ஏபிஎஸ், இஞ்ஜின் இம்மொபைலைஸர் மற்றும் யூஎஸ்பி உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகிறது.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் எனப்படும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்து அசெம்பிள் செய்யப்படும் முறையில் தயாரிக்கபட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைந்த மாடல்;

விலை குறைந்த மாடல்;

தற்போதைய நிலையில், ஸ்ட்ரீட் ட்வின் மாடல் தான், டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மாடல்களில் விலை குறைந்த மாடலாக உள்ளது.

விலை;

விலை;

ஸ்ட்ரீட் ட்வின் மாடல் மற்றும் டி120 மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது. இந்த 2 மாடல்களுக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசத்தை டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் குறைக்கும். டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், சுமார் 8 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிரதமர் மோடி பயன்பாட்டிற்காக புதிய ஜம்போ விமானங்கள்... இனி ஒபாமா ஸ்டைலில் பயணம்!!

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா... வெயிட் பண்ணெல்லாம் முடியாதுங்கறேன்... !!

பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய ஷாரூக்கான்... !!

English summary
Triumph Motorcycles would be launching its all-new Bonneville T100 in India on October 18th. New Bonneville T100 was recently showcased at 2016 INTERMOT Motor Show. Triumph is launching its new model in India within one month of its global unveil. Bonneville T100 will be offered in India as CKD (Completely Knocked Down) unit. To know more, check here...
Story first published: Friday, October 14, 2016, 9:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark