2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜூன் 3-ல் அறிமுகம்

By Ravichandran

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் வழங்கும் 2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜூன் 3-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர்..

டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர்..

இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், கஃபே ரேசர் (Cafe Racer) அடிப்படையிலான டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளை தயாரித்து வழங்குகிறது.

கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் என்பது செயல்திறனை அதிகரிப்பதற்காக மேம்பாடுகள் செய்யப்படும் வாகனங்களை குறிக்கிறது.

முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ட்வின், போனிவில் டி120 மற்றும் த்ரக்ஸ்டன் ஆகிய மோட்டார்சைக்கிள்களை காட்சிபடுத்தியது.

தோற்றம்;

தோற்றம்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், முந்தைய மாடலோடு ஒப்பிடுகையில், எந்த விதமான ஒருமைப்பாடு கொண்டிருக்கவில்லை.

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளின் டிசைன் மற்றும் இஞ்ஜின் உள்ளிட்டவை முழுக்க முழுக்க பிரத்யேகமான முறையில் உருவாக்கபட்டுள்ளது.

இதில், ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளில், போனிவில் டி120 மோட்டார்சைக்கிளில் உள்ள அதே இஞ்ஜின் தான் போருத்தபட்டுள்ளது. ஆனால், இதில் ஏராளமான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், 1,200 சிசி பேரலல் ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தபட்டிருக்கும்.

இந்த இஞ்ஜின், 96.55 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 112 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளில், டிரையம்ஃப் நிறுவனம் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை வழங்கியுள்ளது.

ஃபோர்க்குகள்;

ஃபோர்க்குகள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளில், முழுவதுமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா ஃபிரண்ட் ஃபோர்க்குகளும், ஆஹ்ளின்ஸ் ரியர் சஸ்பென்ஷன் ஆகியவை ஸ்டான்டர்ட் அம்சங்களாக வழங்கபடுகிறது.

டயர்கள்;

டயர்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளுக்கு, ஸ்டிக்கி பிரெல்லி ரோஸ்ஸோ கோர்ஸா டயர்கள் பொருத்தபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்கும்.

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், டயாப்லோ ரெட், சில்வர் ஐஸ் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், இந்த ஜூன் 3-ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விலை;

விலை;

2016 டிரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள், அமெரிக்காவில் 14,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 9.74 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிரையம்ஃப் போனிவில் பைக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய நடிகர் துல்கர் சல்மான்!

இந்தியாவில் ஸ்பெஷல் ராக்கெட்டை அறிமுகப்படுத்தும் டிரையம்ஃப் நிறுவனம்!

டிரையம்ஃப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Britain-based two-wheeler maker Triumph Motorcycles will launch their 2016 Triumph Thruxton R Motorcycle on June 3, 2016. 2016 Thruxton R is a cafe racer inspired motorcycle from Triumph Motorcycles. The 2016 Thruxton R model will be available in only three colour options - Diablo Red, Silver Ice, and Matt Black colour. To know more, check here...
Story first published: Friday, May 27, 2016, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X