டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், மும்பையில் அறிமுகம்

Written By:

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிளின் பிராந்திய அறிமுகம் மும்பையில் நடைபெற்றது.

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸலைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் பற்றி...

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் பற்றி...

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள் பெரிதும் விரும்பபடும் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிளின் இந்திய அறிமுகம், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், 900 சிசி, லிக்விட் கூல்ட், பேரலல் ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த மாடல் முன்பு இருந்த மாடலை காட்டிலும், சற்று கூடுதல் மேம்பட்ட திறன் கொண்டுள்ளது.

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் 54.2 பிஹெச்பியையும், 80 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான் பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தபடுகிறது.

பிரேக்;

பிரேக்;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், இரு முனைகளிலும், டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், அல்லாய் வீல்கள், ட்ஜிட்டல் ஃப்யூவல் கேஜ் கொண்ட ஆனலாக் ஸ்பீடோமீட்டர் எல்ஈடி டெய்ல் லேம்ப்கள், ரைட்-பை-வையர் திராட்டில் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

மேலும், இது மாற்றம் செய்யபட்ட சேஸி மற்றும் சஸ்பென்ஷன் செட் அப் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், மேட் பிளாக், ஜெட் பிளாக், அலுமினியம் சில்வர் மற்றும் கிரான்பெர்ரி ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

விலை;

விலை;

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், 7.21 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலையில் விற்கபடுகிறது.

டெலிவரி;

டெலிவரி;

மும்பையில் நடைபெற்ற இந்த பிராந்திய அறிமுக நிகழ்ச்சி நடைபெற்ற நாளிலேயே, 4 வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள் டெலிவரி செய்யபட்டது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிரையம்ஃப் போனிவில் பைக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய நடிகர் துல்கர் சல்மான்!

ட்ரையம்ஃப் நிறுவனத்தின், 2016 போனிவில் மோட்டார்சைக்கிள்களுக்கு புக்கிங் துவக்கம்

டிரையம்ஃப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Triumph Bonneville Street Twin was launched in Mumbai. Earlier, Bonneville Street Twin was launched in India during 2016 Delhi Auto Expo. New Triumph Bonneville Street Twin is available in 4 colours like Matt Black, Jet Black, Aluminium Silver, and Cranberry Red. It is launched in Mumbai at price of Rs. 7.21 lakh ex-showroom (Mumbai).
Story first published: Monday, March 7, 2016, 10:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark