டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை, மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் சர்வதேச நிறுவனங்களும் புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரிட்டனை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனமும் தங்களின் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

போனிவில் டி100...

போனிவில் டி100...

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், புராதனமான ‘59 போனிவில் மாடலின் பிரபாவம் கொண்டுள்ளது. பல்வேறு புராதனமான ஒரிஜினல் அம்சங்கள் கொண்டுள்ள வகையில், இந்த புதிய டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், டியூவல் டான் பெயின்ட் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் செதுக்கப்பட்டது போன்ற ஃப்யூவல் டேங்க் மற்றும் பீஷூட்டார் சைலன்சர்கள் ('peashooter' silencers) ஆகியவை இதன் ரெட்ரோ ஸ்டைல் அம்சங்களை கூட்டும் வகையில் உள்ளன.

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளின் ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டர் கொண்டுள்ளது. இவை, கியர் இன்டிகேட்டர், சர்வீஸ் இன்டிக்கேட்டர், எம்டியாகும் ரேஞ்ச், ஃப்யூவல் லெவல் உள்ளிட்டவற்றை காண்பிக்கிறது.

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளின் ஹேண்டில்பார் மீது ஒரு ஸ்க்ரோல் பட்டன் உள்ளது. இது ஸ்விட்சபில் ஏபிஎஸ் ஆபரேட் செய்ய உதவுகிறது.

ஃபிரேம்;

ஃபிரேம்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு, டிரையம்ஃப் போனிவில் டி120 மோட்டார்சைக்கிளின் ஃபிரேம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளில், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைட்-பை-வயர் திராட்டில், ஏபிஎஸ், இஞ்ஜின் இம்மொபைலைஸர் மற்றும் யூஎஸ்பி உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளது.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் எனப்படும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்து அசெம்பிள் செய்யப்படும் முறையில் தயாரிக்கபட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு, 8 வால்வுகள் உடைய 900 சிசி, லிக்விட் கூல்ட், எஸ்ஓஹெச்சி, பேரலல் ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 54 பிஹெச்பியையும், 80 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் ரியர் வீல்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், டியூபுளார் ஸ்டீல் ட்வின் கிரேடில் சேஸி கொண்டுள்ளது. மேலும், இது ரியர் பகுதியில் 120 மில்லிமீட்டர் டிராவல் உடைய 41 மில்லிமீட்டர் கேஒய்பி ஃபோர்க்குகள் கொண்டுள்ளது. கடுமையான நிலைமைகளை, அட்ஜஸ்டிபில் ப்ரீலோட் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவல், ட்வின் கேஒய்பி ஃபோர்க்குகள் கையாளுகிறது.

பிரேக்;

பிரேக்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில், நிஸ்ஸின் 2-பிஸ்டன் ஃபிலோட்டிங் கேளிப்பர்கள் உடைய சிங்கிள் 310 மில்லிமீட்டர் ஃபிலோட்டிங் டிஸ்க் உதவியினாலும், பின் பகுதியில் நிஸ்ஸின் 2-பிஸ்டன் ஃபிலோட்டிங் கேளிப்பர்கள் உடைய 255 மில்லிமீட்டர் டிஸ்க் உதவியினாலும் பிரேக்கிங் பணிகள் மேற்க்கொள்ளப்படுகிறது. கூடுதலாக, இதில் ஏபிஎஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

வீல்கள், டயர்கள்;

வீல்கள், டயர்கள்;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிளுக்கு, 32-ஸ்போக்குகள் உடைய வயர்ட் ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன் பக்கத்தில், 100/90-R18 டயர்களும், பின் பக்கத்தில் 150/70-R17 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

விலை;

விலை;

டிரையம்ஃப் போனிவில் டி100 மோட்டார்சைக்கிள், 7.78 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில்: மே 29ல் சோதனை ஓட்டம்!

கடைசி நம்பிக்கை... சுனாமியிலும் உயிர் தப்பிக்க உதவும் உயிர் மிதவை பந்து!

எகிப்து விமான விபத்துக்கு வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதலே காரணம்?

English summary
British motorcycle manufacturer Triumph has launched Triumph Bonneville T100 launched in India. Design wise, T100 is inspired by legendary ‘59 Bonneville and has been beautifully designed to incorporate many original's iconic features. New T100 is available in two-tone paint options. This features retro styling cues like sculpted fuel tank and 'peashooter' silencers. To know more, check here...
Story first published: Tuesday, October 18, 2016, 17:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark