டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டிரையம்ஃப் போனிவில் டி120...

டிரையம்ஃப் போனிவில் டி120...

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், பிரட்டனை மையமாக கொண்டு இயங்கும் டிரையம்ஃப் நிறுவனத்தால் தயாரித்து வழங்கபடுகிறது.

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், இந்தியாவில் பெரிய அளவில் எதிர்பார்க்கபடும் பைக்குகளில் ஒன்றாக உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், லிக்விட்-கூல்ட், 1200 சிசி, பேரலல் ட்வின் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 79 பிஹெச்பியையும், 105 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான், பின் பகுதிக்கு பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.

பிரேக்;

பிரேக்;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கின் முன் பக்கத்தில், 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட ட்வின் 310 மில்லிமீட்டர் டிஸ்குகளும், பின் பக்கத்தில் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட சிங்கிள் 255 மில்லிமீட்டர் டிஸ்கும் பொருத்தபட்டுள்ளது.

இவை இந்த பைக்கின் பிரேக்கிங் பணிகளை கவனித்து கொள்கிறது. இந்த டிஸ்குகளுக்கு உதவியாக ஏபிஎஸ் செயல்படுகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கின் முன் பக்கத்தில், 120 மில்லிமீட்டர் டிராவல் கொண்ட 41 மில்லிமீட்டர் கயாபா ஃபோர்க்குகள் செட் வழங்கபட்டுள்ளது.

இதன் பின் பக்கத்தில், 120 மில்லிமீட்டர் டிராவல் கொண்ட ட்வின் கயாபா ஷாக் அப்சார்பர்கள் வழங்கபட்டுள்ளது. இவை, இந்த பைக்கின் பிரேக்கிங் பணிகளை மேற்கொள்கிறது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஸ்டைலிங் பொருத்த வரை, டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கிற்கு ரெட்ரோ தோற்றம் வழங்கபட்டுள்ளது.

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கிற்கு, வட்ட ஹெட்லேம்ப்களுடன் ஒருங்கிணைக்கபட்ட டிஆர்எல் அல்லது டேடைம் ரன்னிங் லைட்கள், செதுக்கபட்ட டேங்க் மற்றும் பைக்கின் இரு பக்கத்திலும் 2 எக்ஹாஸ்ட்டுகள் வழங்கபட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கிற்கு ஹீட்டட் சீட்கள் மற்றும் கிரிப்கள், ரைட் பை வயர் திராட்டில், 2 ரைடிங் மோட்-கள் வழங்கபட்டுள்ளது.

மேலும், இதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் ஒரு இஞ்ஜின் இம்மொபைலைஸர் பொருத்தபட்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், இந்தியா முழுவதும் உள்ள டிரையம்ஃப் நிறுவனத்தின் 12 ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டி;

போட்டி;

தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில் டிரையம்ஃப் போனிவில் டி120 பைக்கிற்கு போட்டியாக எந்த வாகனமும் இல்லை.

விலை;

விலை;

டிரையம்ஃப் போனிவில் டி120 பைக், 8,70,000 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிரையம்ஃப் போனிவில் பைக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய நடிகர் துல்கர் சல்மான்!

டிரையம்ஃப் போனிவில் ஸ்ட்ரீட் ட்வின் மோட்டார்சைக்கிள், மும்பையில் அறிமுகம்

டிரையம்ஃப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
British motorcycle manufacturer Triumph has launched their Triumph Bonneville T120 in India. Triumph has gone with retro look with its round headlamps for this bike. New Bonneville T120 is available in Triumph's 12 showrooms across India. It is priced at Rs. 8,70,000 ex-showroom (Delhi). To know more about Triumph Bonneville T120 bike, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark