டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நடத்தும் மான்சூன் செக்கப் கேம்ப் துவக்கம்

Written By:

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், மான்சூன் செக்கப் கேம்ப் என்ற பெயரில் மழைக்காலத்திற்கு முந்தைய சர்வீஸ் கேம்ப்பை மும்பையில் நடத்துகின்றனர். இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த மான்சூன் செக்கப் கேம்ப், ஜூன் 26 முதல் ஜூலை 9 வரை நடைபெறும்.

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த மான்சூன் செக்கப் கேம்ப்பில், பங்கு பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் ஆதாயங்கள் வழங்கப்படுகிறது. டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களின் செக்கப்களை இலவசமாக மேற்கொள்ளலாம்.

triumph-motorcycles-monsoon-check-up-camp-26-june-9-july

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் மும்பை, தங்கள் வாடிக்கையாளர்களின் வாகனத்திற்கு இலவச வாஷிங் மற்றும் கிளீனிங் சர்வீஸ் வழங்குகின்றது. டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் வாடிக்கையாளர்கள், இந்த சேவைகளை மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம்.

ஆக்ஸசரீஸ், லேபர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் மீது 15% மதிப்பிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் மும்பை, ஏராளமான தள்ளுபடிகளை வழங்குகின்றது. டிரையம்ஃப் குளோத்திங் (உடுப்புகள்) அல்லது மெர்சண்டைஸ் வாங்கும் போது, 20% தள்ளுபடி கிடைக்கும்.

கடந்த 30 மாதங்களில், 3,000 இரு சக்கர வாகனங்களை விற்றுள்ளதாக டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மைல்கல்லை கொண்டாடும் டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு குறுகிய கால சலுகைகளை வழங்கி கொண்டாடியது.

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஏராளமான 2 சக்கர வாகனங்களை வழங்கி வருகிறது. நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர்கள், முழுமையான ஃபேரிங் செய்யபட்ட ஸ்போர்ட் பைக்குகள், க்ரூஸர்கள், மாடர்ன் கிளாசிக்ஸ் மற்றும் அட்வென்ச்சர் பைக்குகள் உள்ளிட்டவற்றை டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்கள் ரேஞ்ச்சில் கொண்டுள்ளது.

English summary
Britain-based 2 Wheeler manufacturer, Triumph Motorcycles organises Monsoon Check-Up Camp in Mumbai. This Free camp will be held from June 26 to July 9, 2016. Several offers and benefits will be offered to customers taking part in the check-up camp. Customers can avail free general check-up of their two-wheelers. Free washing and cleaning of motorcycles also offered...
Story first published: Monday, June 27, 2016, 18:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark