புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், பிராந்திய அளவில் மஹாராஷ்டிராவில் அறிமுகம்

Written By:

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக்கை, பிராந்திய அளவில் மஹாராஷ்டிராவில் அறிமுகம் செய்துள்ளனர்.

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், 2 விதமான வேரியண்ட்களின் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஒரு தேர்வு டிரம் பிரேக் உடையது. மற்றொரு தேர்வு, டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், 110 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 9 பிஹெச்பியையும், 9 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்பின் கருத்துபடி, புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், ஒரு லிட்டருக்கு 76 கிலோமீட்டர் மைலேஹ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

தற்போதைய நிலையில், புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த பைக், ப்லிஸ்ஃபுல் புளூ, ஜெனரஸ் கிரே, பீடிஃபிக் பிளாக் சில்வர், செரீன் சில்வர், ரெஸ்ட்ஃபுல் ரெட் மற்றும் பேலன்ஸ்ட் பிளாக் ரெட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

அனைத்து மாடல்களுக்கும் ஸ்டைலிஷான ஸ்டிக்கர்கள் வழங்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், வகைபடுத்தபட்டுள்ள குறிப்பிட்ட செக்மெண்ட்டில் எக்கசக்கமான போட்டி உள்ளது.

இந்த பைக், மஹிந்திரா செண்டிட்ரோ, ஹீரோ பேஷன் எக்ஸ்புரோ, ஹோண்டா ட்ரீம் ரேஞ்ச் ஆகிய இரு சக்கர வாகனங்களுடன் போட்டிப்போட வேண்டி இருக்கும்.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், மஹாராஷ்டிரா முழுவதிலும் உள்ள அனைத்து டிவிஎஸ் மோட்டார்ஸ் ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

குறிப்பு;

குறிப்பு;

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக், அனைத்து மாநிலங்களிலும் விற்பனைக்கு கிடைக்காது. தேர்ந்தெடுக்கபட்ட மாநிலங்களில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டு வருகின்றது என்பது குறுப்பிடதக்கது.

விலைகள்;

விலைகள்;

புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக்கின் டிரம் பிரேக் கொண்ட அடிப்படை மாடல், 48,188 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மஹாராஷ்டிரா) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த பைக், முன்பக்கத்தில் தேர்வு முறையிலான டிஸ்க் பிரேக் தேர்விலும் கிடைக்கிறது.

முன்பக்கத்தில், டிஸ்க் பிரேக் வசதி கொண்ட புதிய 2016 டிவிஎஸ் விக்டர் பைக்கின் இந்த வேரியண்ட், 51,188 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மஹாராஷ்டிரா) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம்

டிவிஎஸ் விக்டர் பைக் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்... புதிய வடிவில்...!!

டிவிஎஸ் விக்டர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
TVS Motors has launched their 2016 TVS Victor Bike in Maharashtra, regionally. It is available in 2 variants. This Bike is available in 6 Colors - Blissful Blue, Generous Grey, Beatific Black Silver, Serene Silver, Restful Red, and Balanced Black Red. It is available with Drum Brakes and Disc Brakes options. To know more about new 2016 TVS Victor Bike, check here.
Story first published: Tuesday, March 22, 2016, 10:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark