விரைவில் வருகிறது 'மேட் இன் தமிழ்நாடு' டிவிஎஸ் அகுலா ஸ்போர்ட்ஸ் பைக்!

Written By:

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டிவிஎஸ் அகுலா என்ற புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த கான்செப்ட் மாடல் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

டிவிஎஸ் நிறுவனத்தின் மிக சக்திவாய்ந்த மாடல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இந்த புதிய பைக் மாடல் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்படுவதை டிவிஎஸ் மோட்டார்ஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ஸ்போர்ட்ஸ் பைக்

ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட முழுமையான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக டிவிஎஸ் அகுலா பைக் வர இருக்கிறது. இந்த பைக் மாடல் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது.

இரு மாடல்கள்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் அடிப்படையிலான மாடல் என்பதால், எஞ்சின், சேஸி உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் பங்கிட்டுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், இரண்டு பைக்குகளும் வெவ்வேறு பிராண்டில் விற்பனை செய்யப்பட உள்ளன.

எஞ்சின்

புதிய டிவிஎஸ் அகுலா பைக்கில் இருக்கும் 313சிசி எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

இந்த பைக்கின் இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் வருகிறது. 17 இன்ச் டயர்கள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவையும் இந்த பைக்கின் மிக முக்கிய சிறப்புகளாக இருக்கும்.

உற்பத்தி

டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில்தான் இந்த பைக் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதே ஆலையில்தான் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கும் உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கும் விலை

வரும் மார்ச் மாதம் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த புதிய பைக் மாடல் ரூ.2 லட்சத்தையொட்டி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி390, யமஹா ஆர்3 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

English summary
TVS will launch the fully faired Akula in India during March 2017 and the motorcycle will be priced under Rs 2 lakh.
Please Wait while comments are loading...

Latest Photos