டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக், 8 வேரியண்ட்டுகளில் அறிமுகம்

Written By:

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக், இனி 8 வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது. இதில், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மட்டும் வேரியண்ட்டுகள் பின்னர் விற்பனைக்கு வர இருக்கிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், புதிய தலைமுறை அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. இது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் படிப்படியாக கிடைக்க உள்ளது.

tvs-apache-rtr-200-4v-bike-launched-in-8-new-variants

கிடைக்கும் வேரியண்ட்கள்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபளாக்‌ஷிப் மாடலான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக், மொத்தம் 8 வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது. என்ன என்ன வேரியண்ட்களில் கிடைக்க உள்ள பட்டியலை பார்ப்போம்.

(*) கார்புரேட்டர் + டிவிஎஸ் ரெமோரா டையர்கள்

(*) கார்புரேட்டர் + பிரெல்லி டையர்கள்

(*) கார்புரேட்டர் + டிவிஎஸ் ரெமோரா டையர்கள் + ஏபிஎஸ்

(*) கார்புரேட்டர் + பிரெல்லி டையர்கள் + ஏபிஎஸ்

(*) ப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் + டிவிஎஸ் ரெமோரா டையர்கள்

(*) ப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் + பிரெல்லி டையர்கள்

(*) ப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் + டிவிஎஸ் ரெமோரா டையர்கள் + ஏபிஎஸ்

(*) ப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் + பிரெல்லி டையர்கள் + ஏபிஎஸ்

அனைத்து ஏபிஎஸ் மாடல்களும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தான் கிடைக்க உள்ளது. மற்ற வேரியண்ட்களை எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக், 88,990 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரும் டெல்லி) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக்கின் மிகவும் விலை உயர்ந்த மாடல், 1.07 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரும் டெல்லி) விலையில் கிடைக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக், 197.75 சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. கார்புரேட்டர் மாடல் உடைய இதன் இஞ்ஜின், 8,500 ஆர்பிஎம்-களில் 20.5 பிஎஸ் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

ப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் மாடல் உடைய இதன் இஞ்ஜின், 8,500 ஆர்பிஎம்-களில் 21.0 பிஎஸ் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களுமே, 7,000 ஆர்பிஎம்-களில், உச்சபட்சமாக 18.1 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

போட்டி நிறுவனங்களின் பைக்களை காட்டிலும், உச்சபட்ச பவர் மற்றும் டார்க் அளவுகள் குறைவாக இருந்தாலும், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக், செக்மெண்ட்டிலியே சிறந்த இன்-கியர் ஆக்ஸிலரேஷன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் படங்கள்... முதல்முறையாக டிரைவ்ஸ்பார்க் தளத்தில்... 

English summary
TVS Apache RTR 200 4V bike is launched in 8 variants. The new flagship model, the new generation Apache RTR 200 4V will be available in India across all the dealerships in a phased manner. But, all the ABS models will be available only from March 2016. The other variants can be booked at once from any dealerships.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X