டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் படங்கள்... முதல்முறையாக டிரைவ்ஸ்பார்க் தளத்தில்...

Written By:

வரும் 20ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கின் படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. முதல்முறையாக அடையாளங்கள் மறைக்கப்படாமல், தற்போது அப்பாச்சி 200சிசி பைக் படங்கள் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய அப்பாச்சி மாடல்களிலிருந்து முற்றிலும் புதிய டிசைனிலும், அப்பாச்சி வரிசையில் அதிக சக்திவாய்ந்த மாடலாகவும், போட்டியாளர்களைவிட குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இளசுகளின் மத்தியில் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

இந்த புதிய அப்பாச்சி 200சிசி பைக் மாடல் நேக்கட் பாடி ஸ்டைல் கொண்டது. அதாவது, உடலை மறைப்பதற்கான ஃபேரிங் பேனல்கள் எதுவுமில்லாமல் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

 இலகு எடை

இலகு எடை

அனாவசியமான பாகங்கள் எதுவும் சேர்க்கக்கூடாது என்ற டிசைன் கொள்கையின் உறுதியில் இலகு எடை மாடலாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த பைக் வெறும் 140 கிலோ எடை கொண்டிருப்பதால் கையாளுமை சிறப்பாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.23 எச்பி பவரையும், 18.1 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 197.75சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் 0 - 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். அத்துடன் மணிக்கு 130 கிமீ வேகம் வரை செல்லும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எல்இடி டெயில் லைட்டுகள், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்பிளிட் இருக்கைகள், எஞ்சின் கவுல், இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

முழுவதுமான டிஜிட்டல் மீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டாக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், கடிகாரம், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர், கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், ஏபிஎஸ் லைட் உள்ளிட்டவை மீட்டர் கன்சோலில் இடம்பெற்று இருக்கிறது.

டயர்கள்

டயர்கள்

முன்புறத்தில் 90/90-R17 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/70-R17 டயரும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் டிவிஎஸ் ஸ்ரீசக்கரா பிராண்டு டயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுளளன.

கவர்ச்சியான ஸ்டிக்கர்

கவர்ச்சியான ஸ்டிக்கர்

பெட்ரோல் டேங்க்கில் அப்பாச்சி பெயர் கொடுக்கப்பட்டிருப்பதுடன், RTR ஆங்கில எழுத்துக்கள் பெரிதாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இருக்கைக்கு கீழே டிவிஎஸ் ரேஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. கிராப் ரெயிலுக்கு பின்புறத்தில் RTR 200 4V என்று பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு, மஞ்சள், கருப்பு, சில்வர், வெள்ளை மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு வண்ணம் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.85,000 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் எதிர்பார்க்கப்படுகிறது.

 அறிமுக நிகழ்ச்சி

அறிமுக நிகழ்ச்சி

சென்னையில் வரும் 20ந் தேதி புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. அதே நாளில், இந்தோனேஷியாவிலும் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 
English summary
TVS Apache RTR 200 4V Revealed In Photos.
Story first published: Sunday, January 17, 2016, 17:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark