டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

போட்டியாளர்களுக்கு கடும் சவால் தரும் விலையில், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் கார்புரேட்டர் கொண்ட இரு விதமான மாடல்களில் கிடைக்கும். புதிய 200சிசி அப்பாச்சி பைக் பற்றிய தேவையான அனைத்து விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மூன்று மாடல்கள்

மூன்று மாடல்கள்

புதிய அப்பாச்சி எஞ்சின் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இரு மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோன்று, விரைவில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மூன்றாவது மாடலும் வர இருக்கிறது. ஏபிஎஸ் மாடலுக்கு, விலை விபரம் அறிவிக்கப்பட்டு விட்டது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல் 21 பிஎச்பி பவரையும், 18 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கார்புரேட்டர் பொருத்தப்பட்ட மாடல் அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரையும், 18 என்எம் டார்க்கையும் வழங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு எஞ்சின் சக்தி பின் சக்கரத்திற்கு கடத்தப்படுகிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குககளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

முழுவதுமான டிஜிட்டல் மீட்டர் கன்சோல், பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், ஸ்பிளிட் இருக்கைகள், டிராக்குகளில் ஓட்டும்போது ஒரு சுற்றை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள பயன்படும் லேப் டைமர், எந்த கியரில் வண்டி செல்கிறது என்பதை காட்டும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் ரிமைன்டர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. பைரெல்லி டயர்களையும் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ள முடியும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு, மஞ்சள், கருப்பு, சில்வர், வெள்ளை மற்றும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு வண்ணம் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

  • டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி கார்புரேட்டர் மாடல்: ரூ.88,990
  • டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்: ரூ.1.07 லட்சம்
  • டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஏபிஎஸ்: ரூ.1.15 லட்சம்

முக்கிய குறிப்பு: ஏபிஎஸ் மாடலுக்கான விலை அறிவிக்கப்பட்டாலும் இப்போது விற்பனைக்கு கிடைக்காது. பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பஜாஜ் பல்சர் ஏஎஸ்200 மற்றும் கேடிஎம் ட்யூக் 200 பைக்குகளுடன் நேரடியாக மோதும்.

 
English summary
TVS has launched the much awaited Apache RTR 200 4V in India for Rs. 88,990/- ex-showroom (Delhi).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark