டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் டெலிவரி ஏப்ரலில் துவங்கும்

Written By:

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் டெலிவரில் வரும் ஏபரல் மாதத்தில் இருந்து துவங்லாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் டெலிவரியை டிவிஎஸ் மோட்டார்ஸ் தாமதித்து கொண்டே வருகிறது. முன்னதாக, இந்த பைக்கை ஜனவரி மாதத்திலேயே கொண்டே வருகின்றது. உறுதியற்றதன்மை நிலவிகொண்டிருப்பதால், அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் புக்கிங் கூட இதுவரை துவங்கவில்லை.

ஆனால், இந்த பைக்குகளின் டெலிவரி, வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. எதற்காக இவ்வளவு தாமதம் ஆனது என்பது குறித்து எந்த விதமான முறையான தகவல்களும் இது வரை வழங்கபடவில்லை. டிவிஎஸ் மோட்டார்ஸ் தரப்பில் இருந்து, எந்த விதமான உறுதிகளும் வழங்கபடவில்லை. எனினும், இந்த மாடல்களின் அடுத்த மாதம் துவங்கும் என டீலர்ஷிப்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் அறிமுகத்தின் போது, இந்த மாடலின் கீழ் வெவ்வேறு வேரியண்ட்கள் வழங்கப்படும் என டிவிஸ் மோட்டார்ஸ் அறிவித்தது. இதன் அடிப்படை வேரியண்ட்டின் விலை 88,990 ரூபாயில் இருந்து துவங்கும் என்றும், இதன் டாப்-எண்ட் வேரியண்ட் 1.08 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும் என தகவல்கள் வெளியாகின்றன.

வழக்கமான கார்புரேட்டட் தேர்வு மற்றும் பாஷ் வழங்கும் ஃப்யூவல் இஞ்ஜெக்‌ஷன் தேர்வு என இதன் இஞ்ஜின்கள் இரு தேர்வுகளுடன் வழங்கபடுகிறது.

tvs-apache-rtr-200-bike-delivery-scheduled-from-april

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக், தேர்வு முறையிலான ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் தேர்வுடன் கிடைக்கிறது. மேலும், டையர்கள் விஷயத்திலும், தேர்வுகள் வழங்கபடுகிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும், பிரெல்லி மற்றும் டிவிஎஸ் டையர்கள் தேர்வுகளுக்கு இடையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும், இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் காட்சிபடுத்தபட்டது. இந்த பைக்கின் டெலிவரிகள் குறித்த தகவல்கள், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், அது தொடர்பாக எந்த அலுவல் ரீதியான அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக், 8 வேரியண்ட்டுகளில் அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் படங்கள்... முதல்முறையாக டிரைவ்ஸ்பார்க் தளத்தில்...

English summary
TVS Motors could begin deliveries of Apache RTR 200 by this April. TVS Motors delayed the deliveries of their RTR 200 motorcycle for Indian market. The latest RTR motorcycle was launched back in January 2016. TVS Motors has not confirmed this news. Anyhow, dealerships are confident that this model will arrive from April.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark