டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், ஜனவரி 20-ஆம் தேதி அறிமுகம்?

By Ravichandran

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், இந்த மாதம் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யபட உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பற்றி...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பற்றி...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இது நேரடியாக கேடிஎம் ட்யூக் 200 பைக்-கிற்கு எதிராக களம் இறங்க உள்ளது.

இது அதிக ஹார்ஸ்பவர் உடனும், ஸ்ட்ரீட் ஃபைட்டர் குணாம்சங்கள் கொண்டுள்ளது. எனினும், இதில் உள்ள உபகரணங்கள் காரணமாக, இது பிற மோட்டார்சைக்கிள்களை காட்டிலும், எளிமையாகவும், வேகமாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.

சிபிஆர்250ஆர் பைக்குடன் இந்த வகையிலான பைக் செக்மண்ட்-டில் டிவிஎஸ் நிறுவனம், 2011-ஆம் ஆண்டிலேயே நுழைய முயற்சித்தனர்.

Image Credit ; motoroids.com

இஞ்ஜின், விவரகுறிப்புகள்;

இஞ்ஜின், விவரகுறிப்புகள்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், அதே ஏர்-கூல்ட் எஞ்சின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் லிக்விட் கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளதாக இருக்காது என உறுதியாகியுள்ளது. இந்த பைக் சுமார் 28 முதல் 30 பிஹெச்பி-யையும், 25 முதல் 26 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

Image Credit ; motoroids.com

மைலேஜ்;

மைலேஜ்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக் ஸ்போர்ட்டியான வாகனம் ஆகும். இதனால், இதிலிருந்து அதிக அளவிலான எரிபொருள் திறன் எதிர்பார்க்க முடியாது.

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு, இந்த பைக் 25 முதல் 30 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என தகவல்கள் வெளியாகிறது.

டியூவல் போர்ட்டு-கள், பெரிய கேட்டலைஸர் உள்ளதை பார்த்தால், இந்த பைக், பிஎஸ்4 மாசு வெளிப்பாடு மதிப்பீடுகளை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

Image Credit ; POWERDRIFT

சேஸி, பிரேக்குகள்;

சேஸி, பிரேக்குகள்;

சேஸி பொருத்த வரை, இந்த முறையும் அதே டபுள் டியூப் சேஸியே தான் கிடைக்க உள்ளது. ஆனால், டிவிஎஸ் நிறுவனம் சிறந்த வகையிலான டியூப் சேஸியை உற்பத்தி செய்கிறது.

Image Credit ; iwanbanaran.com

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷனை பொருத்த வரை, முன்புற ஃபோர்க்குகள் மேலும் திடமான சஸ்பென்ஷன் மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

முதல் முறையாக பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பொருத்தபட்டுள்ளது. முந்தைய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி காட்டிலும், இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக்-கில் பிரேக்கிங் சிஸ்டம் மேம்பட்டதாக இருக்கும்.

இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், ப்ரண்ட்-டில், அனேகமாக 300 மில்லிமீட்டர் டிஸ்க்குகள் மற்றும் ட்வின் பிஸ்டன்களுடன் வர உள்ளது. ரியர் டிஸ்க்கு சுமார் 230 மில்லிமீட்டர் அளவில் இருக்கலாம்.

Image Credit ; motoroids.com

டயர்கள்;

டயர்கள்;

டையர்களை பொருத்த வரை, இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனத்தின் டையர்களே பொருத்தபட்டிருக்கும். முன்னதாக, இந்த பைக், பிரெல்லி மற்றும் ஐஆர்சி நிறுவன டையர்களுடனும் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

Image Credit ; team-bhp.com

எக்ஸ்டீரியர் டிசைன்;

எக்ஸ்டீரியர் டிசைன்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக் பெரிய டேங்க், மஸ்தான் சஸ்பென்ஷன், உயர்த்தபட்ட டெய்ல் செக்‌ஷன், காம்பேக்ட் டெய்ல்-லைட்கள் கொண்டுள்ளது.

மேலும், பெரிய சைட் பேனல்கள், ஸ்ட்ரீட் ஃபைட்டர் தோற்றம் கொண்ட சிறிய ஹெட்லேம்ப் உள்ளது. இது குறைந்த ஹெட்லைட் கௌல் கொண்டுள்ளதாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாக, இது ட்ரேகன் கான்செப்ட் பிரபாவம் கொண்டுள்ளது என கூறலாம். இது அறிமுகம் செய்யபட்ட பின் தான், இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.

Image Credit ; motoroids.com

பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள்;

பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள்;

ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) வசதி ஸ்டாண்டர்ட் அம்சாக வழங்கபடலாம். ஆனால், அந்த வெர்ஷன் பைக்குகள் இன்னும் ஸ்பை செய்யபடவில்லை.

கியர் இண்டிகேட்டர், 2 ட்ரிப் மீட்டர், கிளாக் மற்றும் ரேஸ் டைமர் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் கொண்ட முழு டிஜிட்டல் டாஷ் வசதிகள் இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக்-கில் உள்ளது.

டெய்ல் லைட்கள் மற்றும் ஹெட்லைட்களில் உள்ள எல்ஈடி லேம்ப்கள் பாதுகாப்பையும், அழகையும் கூட்டும் வகையில் உள்ளது.

Image Credit ; iwanbanaran.com

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், வைட், பிளாக், ரெட் மற்றும் வேறு சில கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.

Image Credit ; motoroids.com

போட்டி பைக்கள்;

போட்டி பைக்கள்;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக்-கிற்கு, பஜாஜ் பல்ஸர் ஏஸ்/என்எஸ் 200, சுஸுகி ஜிக்ஸர் 250, கேடிஎம் ட்யூக் 200, பெனெல்லி டிஎன்டி 25 மற்றும்

சிபிஆர்250ஆர் உள்ளிட்ட மாடல்கள் முக்கிய போட்டி பைக்-களாக கருதபடுகிறது.

Image Credit ; team-bhp.com

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், டிசம்பர் மாதத்தில் இருந்தே வெளியாவது குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஜனவரியில் வெளியாகும் என வதந்திகள் வெளியாகிறது.

எப்படி இருந்தாலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டாயம் அறிமுகம் செய்துவிடப்படும்.

Image Credit ; motoroids.com

விலை;

விலை;

இந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக்கின் ஆரம்ப விலை, சுமார் 1 லட்சம் ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏபிஎஸ் வசதியுடன், இந்த பைக் அறிமுகம் செய்யபடும் பட்சத்தில், இந்த ஸ்ட்ரீட் ஃபைட்டர் மோட்டார்சைக்கிளின் விலை 1.3 லட்சம் ரூபாயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Image Credit ; iwanbanaran.com

Most Read Articles
English summary
TVS Apache RTR 200cc bike is all set for its launch in India on 20th January, this monnth. TVS Apache RTR 200cc will take up against the mighty KTM Duke 200. The bike is packed with horsepower and street fighter manners. This TVS Apache RTR 200cc bike could be launched with starting price of 1 Lakh rupees approx.
Story first published: Thursday, January 7, 2016, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X