இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ் வழங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ்

Written By:

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ ரோட்சைட் அசிஸ்டன்ஸ் (Free Roadside Assistance) எனப்படும் இலவச ரோட்சைட் உதவிகளை வழங்குகிறது. சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் எல்லையை தாண்டி, அளவற்ற சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் ஃப்ரீ ரோட்சைட் அசிஸ்டன்ஸ் சேவை தொடர்பான கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ்;

இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ்;

இந்தியாவின் முன்னணி டூ வீலர்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படாத ஃப்ரீ ரோட்சைட் அசிஸ்டன்ஸ் அசிஸ்டன்ஸ் சேவை துவக்கியுள்ளனர். இதன்படி, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சேவையை 24/7 என்ற கணக்கில் 24 மணி நேரமும் பெற்று கொள்ளலாம்.

கிடைக்கும் நகரங்கள்;

கிடைக்கும் நகரங்கள்;

தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த சேவையை இந்தியாவின் 70 நகரங்களில் வழங்கி வருகின்றனர். இந்த சேவை, அடுத்த மாதத்திற்குள், 200 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

முக்கிய நிபந்தனை;

முக்கிய நிபந்தனை;

வாடிக்கையாளர்கள், இந்த 24/7 இலவச சேவையை பெற, அவர்களின் டூ வீலர்கள், வாரண்டி காலத்திற்குள் இருக்க வேண்டும்.

சிறப்பு சேவைகள்;

சிறப்பு சேவைகள்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 24/7 இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ் சேவையில், ஃப்யூவல் டெலிவரி, ஸ்பேர் கீ பிக்-கப், ஆன்சைட் ரிப்பேர் கேப் ஏற்பாடு, விபத்து நேர சேவை (ஆக்சிடன்ட் அசிஸ்டன்ஸ்) மற்றும் வாகனங்களை டோ செய்து கொண்டு செல்வது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது.

முக்கிய நன்மை;

முக்கிய நன்மை;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 24/7 இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ் சேவையினால், வாடிக்கையாளர்கள் தடை இன்றி, பயம் இன்றி பயணிக்க முடியும். ஒருவேளை, ஏதேனும் பிரச்னைகள் நிகழ்ந்தாலும், அவர்களுக்கு உதவ டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் காத்துக்கிடக்கிறது.

சேவையை பெரும் முறை;

சேவையை பெரும் முறை;

இந்த 24/7 இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ் சேவையை பெற, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 1800 419 2077 என்ற டோல்-ஃப்ரீ (கட்டணமில்லா) எண்ணை அழைக்கலாம். அல்லது TVSM Service app என்ற ஆப்பை உபயோகிக்கலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 24/7 இலவச ரோட்சைட் அசிஸ்டன்ஸ் சேவை, இந்தியா முழுவதும் மார்ச் 2017-க்குள் அறிமுகம் செய்யப்படும்.

பிற முக்கிய செய்திகள்;

பிற முக்கிய செய்திகள்;

செவர்லே நடத்தும் பாடி மற்றும் பெயின்ட் சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவக்கம்

ஹூண்டாய் ஃப்ரீ கார் கேர் கிளினிக் சர்வீஸ் முகாம் இந்தியா முழுவதும் துவங்கியது

செப்டம்பரில் கார் மற்றும் டூ வீலர்கள் மீது அட்டகாசமான சலுகைகள்

English summary
India's leading motorcycle and scooter manufacturer, TVS Motor Company is providing free roadside assistance to its two wheeler customers. Under this 24/7 helpline and assistance, services such as, fuel delivery, spare key pick-up, onsite repair cab arrangement, accident assistance and towing of vehicles can be availed. Customers can dial - 18004192077 or can use TVSM Service app to access this service. To know more, check here...
Story first published: Tuesday, September 27, 2016, 7:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark