டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் விரைவில் அறிமுகம்

Written By:

டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்ய உள்ளனர்.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டர் மூலம் தான் முதன் முதலாக, அனம் ஹாஷிம் (Anam Hashim) என்ற ஒரு பெண் பயணி (ரைடர்) இமயமலையில் உள்ள கர்துங் லா பாஸ் (Kardung La pass) சென்று அடைந்தார்.

கர்துங் லா பாஸ், கடல் மட்டத்தில் இருந்து 18380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த சாதனையை நினைவு கூறும் விதமாக தான், இந்த டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யபடுகிறது.

சிறப்பு அம்சம்;

சிறப்பு அம்சம்;

டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் ஸ்கூட்டர், ட்யூவல் டோன் நிற அமைப்பு கொண்டுள்ளது.

இது பிரான்ஸ் ஃபினிஷ் உடைய பிரவுன் வண்ணம் கொண்டுள்ளது. இது ட்யூவல் டோன் சீட் மற்றும் புதிய இண்டீரியர் பேனல்கள் கொண்டுள்ளது.

அனம் ஹாஷிம் சாதனை;

அனம் ஹாஷிம் சாதனை;

பெண் பயணியான (ரைடர்) அனம் ஹாஷிம், கடந்த ஆண்டு டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டர் மூலம் ஜம்மு முதல் கர்துங் லா பாஸ் வரை சென்றார். பின்னர் சாக் லா (Chag La ) என்ற இடம் முதல் பாங்காங் ட்ஸோ ஏரி (Pangong Tso lake) வரை சென்றார்.

அனம் ஹாஷிம் திரும்பி வரும் போது, உலகின் சில மிக உயரிய பகுதிகளில் உள்ள சாலைகளில் சவாரி மேற்கொண்டார். அவர் டக்லாங் லா (Taglang La), லச்சுலுங்க் லா (Lachulung La), காட்டா லூப்ஸ் (the Gata Loops), பாராலாச்சா லா (Baralacha La), மற்றும் சர்ச்சு சமவெளி (the plains of Sarchu) பகுதிகளில் சவாரி மேற்க்கொண்டார்.

கர்துங் லா பாஸ்;

கர்துங் லா பாஸ்;

கர்துங் லா பாஸ் தான், உலக அளவில் அதிக உயரத்தில் சாலைகள் கொண்ட பகுதிகள் ஆகும். அனைவருகும், இந்த பகுதிக்கு இரு முறையாவது சென்று வர ஆசை படுவர்.

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் ரேசிங் குழுக்கள் இந்த கர்துங் லா பாஸ் பகுதியில் சவாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

அனம் ஹாஷிமுக்கு மரியாதை;

அனம் ஹாஷிமுக்கு மரியாதை;

அனம் ஹாஷிம் செய்த இந்த சாதனையை முற்றிலும் போற்றதக்கது.

அனம் ஹாஷிம் செய்த சாதனையை நினைவு கூறும் விதமாக டிவிஎஸ் நிறுவனம், டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் ஸ்கூட்டர் அறிமுகம் செய்வது பாராட்டுக்குறிய விஷயமாகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டர், 109.7 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 7500 ஆர்பிஎம்களில் 8 பிஹெச்பியையும், 5500 ஆர்பிஎம்களில் 8.7 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டரின் இஞ்ஜின், சிவிடிஐ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டர், ஒரு லிட்டருக்கு 62 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் உடையதாகும்.

விலை;

விலை;

டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் ஸ்கூட்டர், 46,113 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வரும் 20ந் தேதி விற்பனைக்கு வருகிறது டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டர்!

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட்.... கொஞ்சம் பெருசு... கொஞ்சம் புதுசு!!

ஸ்கூட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
TVS Motors Company is to commemorate the Scooty Zest for becoming the first scooter to reach Kardung La pass with a female rider named Anam Hashim last year. This achievement by using a scooter by Anam Hashim is great achievement and TVS is acknowledging it, by launching this limited edition scooter named TVS Limited Edition Scooty Zest Himalayan Highs...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more