டிவிஎஸ் ரேசிங் மற்றும் அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி இடையே கூட்டணி

Written By:

டிவிஎஸ் ரேசிங் மற்றும் அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி இடையே அமைந்த புதிய கூட்டணி குறித்த அறிவிப்பை டிவிஎஸ் ரேசிங் முறைப்படி அறிவித்தது.

அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி (Alisha Abdullah Racing Academy) தான், பெண் ரேசர்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் அகாடமி ஆகும். இந்த அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி உடன் அமைக்கப்பட்ட புதிய கூட்டணியை அடுத்து, இந்த அகாடமிக்கு டிவிஎஸ் ரேசிங், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் வழங்கி உதவி செய்ய உள்ளது.

tvs-racing-formally-collaborates-with-alisha-abdullah-racing-academy-for-women

அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி ஆனது, டிவிஎஸ் நிறுவனத்திற்காக முதல் ஆண்டில் ரேசிங் செய்ய உள்ள 18 பெண் ரைடர்களை ஏற்கனவே தேர்வு செய்துள்ளது. முன்னதாக, இந்த ரேசிங் அகாடமி நடத்திய பல்வேறு தேர்வுகளில் 80 பெண் ரேசர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிபடுத்தினர். இந்த 80 பெண் ரேசர்களில் இருந்து தான், டிவிஎஸ் நிறுவனத்திற்காக ரேசிங் செய்ய உள்ள 18 பெண் ரைடர்கள் இறுதியாக தேர்ந்து எடுக்கபட்டனர்.

இந்த 18 பெண் ரைடர்கள், தங்களின் உடற்தகுதி மற்றும் ரைடிங் திறன்களை மேம்படுத்தி கொள்ளும் வகையில், இவர்களுக்கு சென்னையில் வாடைகைக்கு எடுக்கபட்டுள்ள ரேசிங் டெஸ்ட் டிராக்கில் பயிற்சிகள் வழங்கபட்டு வருகிறது.

அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமியின் ஸ்தாபகரான அலிஷா அப்துல்லா, டிவிஎஸ் ரேசிங் உடன் அமைந்த இந்த கூட்டணி குறித்து பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

இது குறித்து கூறுகையில், "டிவிஎஸ் ரேசிங் உடன் அமைந்த இந்த கூட்டணியினால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளோம். இதற்கு காரணம், டிவிஎஸ் ரேசிங் தான் இந்தியாவிலேயே மிகவும் தொழிற்பண்பட்ட (புரோஃபெஷனல்) டூ வீலர் ரேசிங் டீம் ஆகும். டிவிஎஸ் ரேசிங், நல்ல நிபுணர்களையும், சிறந்த மோட்டார்பைக்குகளையும் கொண்டுள்ளது" என அலிஷா அப்துல்லா கூறினார்.

"பெஸ்ட் இன் கிளாஸ் மெஷின்ஸ் (Best in class machines) எனப்படும் சிறந்த வாகனங்கள், ரேசர்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளதால், டிவிஎஸ் ரேசிங் உடன் அமைந்த இந்த கூட்டணி மூலம் பெண் ரேசர்களுக்கு இருக்கும் திறனை சிறந்த முறையில் வளர்த்திட முடியும். டிவிஎஸ் ரேசிங் மற்றும் அலிஷா அப்துல்லா ரேசிங் அகாடமி இடையே அமைந்த புதிய கூட்டணியை அடுத்து, இந்தியாவில் அதிக அளவிலான பெண் ரேசர்கள், இந்த மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் பிரவேசம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்" என அலிஷா அப்துல்லா தெரிவித்தார்.

English summary
TVS Racing has announced collaboration with Alisha Abdullah Racing Academy for Women, which is first training school for Women Racers in India. TVS Racing will support this academy with technical expertise and motorcycles. Alisha Abdullah Racing Academy has shortlisted 18 women riders who will race for TVS in first year. To know more, check here...
Story first published: Saturday, June 4, 2016, 9:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark