இனி டிவிஎஸ் வாகனங்களை ஸ்னாப்டீல் மூலமும் வாங்கலாம்

By Ravichandran

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் 2 சக்கர வாகனங்களை ஆன்லைனில் விற்பதற்கு, ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

டிவிஎஸ் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுக்கு இடையே உருவாக்கபட்டுள்ள இந்த புதிய ஏற்பாடு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இணையதளம் மூலம் விற்பனை;

இணையதளம் மூலம் விற்பனை;

காலம் செல்ல செல்ல பொருட்கள் விற்கபடும் முறைகளும் மாறிக்கொண்டே வருகிறது. பல்வேறு பொருட்கள் வலைதளங்கள் மூலம் விற்கபட்டு வந்த நிலையில், தற்போது இரு சக்கரங்களும் விற்கபடும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது.

ஸ்னாப்டீல் விற்கும் பைக்கள்;

ஸ்னாப்டீல் விற்கும் பைக்கள்;

தற்போதைய நிலையில், ஸ்னாப்டீல் நிறுவனம் மூலம், சுஸுகி மோட்டார்சைக்கிள்கள், மஹிந்திரா டூ வீலர்கள் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் தயாரிப்புகள் விற்கபட்டு வருகிறது.

மக்கள் விரும்பும் முறை;

மக்கள் விரும்பும் முறை;

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை வாங்குவது தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு முன், அதன் தொடர்பான தேடல்களை ஆன்லைனில் மேற்கொள்கின்றனர்.

தேடல்களின் அடுத்த படியாக, இரு சக்கர வாகனங்களை ஆன்லைனில் புக்கிங் செய்யும் முறைகளும் தற்போது பிரபலமாகி வருகிறது.

டீலர்ஷிப்கள் விவரம்;

டீலர்ஷிப்கள் விவரம்;

தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் சுமார் 1,000 டீலர்ஷிப்கள் உள்ளது. மேலும், 3,000 சப் டீலர்களும் உள்ளனர்.

இந்நிலையில், ஆன்லைனில் துவங்கபட்டுள்ள மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை அளவுகளை மேலும் அதிகரிக்க உள்ளது.

ஃப்ளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை;

ஃப்ளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை;

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், கேடிஎம், பஜாஜ் மற்றும் கவாஸாகி மோட்டார்சைக்கிள்களை ஃப்ளிப்கார்ட் தளம் மூலம் விற்பனை செய்து வருகின்றது.

ஆனால், ஃப்ளிப்கார்ட் மூலம் 2 சக்கர வாகனங்கள் வாங்கும் முறையானது பெங்களூரூ நகரத்தில் மட்டுமே அமல்படுத்தபட்டு வருகிறது.

புக்கிங் வரையிலான நடவடிக்கைகள் ஆன்லைனில் செய்யலாம். இதையடுத்து தொடரும் பேப்பர் ஒர்க் எனப்படும் பிற விற்பனை நடவடிக்கைகள் அருகில் உள்ள டீலர்ஷிப்களிடம் மேற்கொள்ளபடுகிறது.

ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு;

ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு;

இந்தியாவிலும் தயாரிப்பாளர்கள் தங்களின் பொருட்களை ஆன்லைனில் விற்கும் கலாச்சாரம் நாளுக்குநாள், அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இரு சக்கர வாகனங்கள் ஆன்லைனில் விற்கபடும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதை உணர்ந்து வரும் நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்த நடைமுறையை ஏற்று கொண்டு வருகின்றனர்.

எப்போது விற்பனை துவக்கம்?

எப்போது விற்பனை துவக்கம்?

ஸ்னாப்டீல் மூலம் டிவிஎஸ் நிறுவனம், தங்களின் இரு சக்கர வாகனங்களை விற்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

வாகன விற்பனைக்கு பிரத்யேக இணையதளத்தை திறந்த ஸ்னாப்டீல்

இனி ஸ்னாப்டீல் தளம் மூலமும் சுஸுகி இருசக்கர வாகனங்களை வாங்கலாம்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு புல்லட் புரூஃப் கிட்: ஸ்நாப்டீல் தளத்தில் விற்பனை!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
TVS Motors has joined hands with Snapdeal for the online sales of their motorcycles and scooters in India. As of now, Suzuki Motorcycles, Mahindra Two Wheelers, and Hero MotoCorp products are sold through Snapdeal. Snapdeal E-commerce site is expected to begin the sale of their TVS products from this March month.
Story first published: Tuesday, February 16, 2016, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X