டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக் இந்தியாவில் அறிமுகம்

Written By:

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக்கின் சாக்லேட் கோல்ட் எடிஷன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன்...

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன்...

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தாங்கள் வழங்கும் ஸ்டார் சிட்டி+ பைக்கில் புதிய சாக்லேட் கோல்ட் எடிஷன் அறிமுகம் செய்துள்ளனனர்.

சாக்லேட் கோல்ட் எடிஷன் ஆனது, கோல்ட், பிரவுன் மற்றும் டேன் வண்ணங்களின் கலவை ஆகும்.

வீல்கள்;

வீல்கள்;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக்கின் வீல்கள், கோல்ட் நிறத்திலான அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக்கில் சாக்லேட் கோல்ட் எடிஷன் அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரி அருன் சித்தார்த் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார்.

"கோல்ட் மற்றும் மேட் சாக்லேட் பிரவுன் நிறத்தின் கலவை ஆகும். புதிய சாக்லேட் கோல்ட் எடிஷன், மேட் எடிஷன் பிரபலத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கோல்ட் நிறம் இதன் ஸ்டைலை கூட்டுகிறது. பல்வேறு நிறங்கள், வாடிக்கையாளர்கள் குனாதிசயங்களை பிரதிபளிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய வகையில் ஸ்டைல் நாடுபவர்களுக்கு, இந்த் சாக்லேட் கோல்ட் எடிஷன் சிறந்த தேர்வாக இருக்கும்" என அருன் சித்தார்த் கூறினார்.

பிற நிறங்கள்;

பிற நிறங்கள்;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக்குடன், டிவிஎஸ் மோட்டார்ஸ் மூலம் முன்னதாக அறிமுகம் செய்யபட்ட மேட் டைடேனியம் கிரே மற்றும் கோல்ட் நிறத்திலான மாடல்களும் கிடைக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக், அதே 109.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 7,000 ஆர்பிஎம்களில் 8.3 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 5,000 ஆர்பிஎம்களில் 8.7 என்எம் டார்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர் பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

பிற அறிமுகங்கள்;

பிற அறிமுகங்கள்;

இந்த மாதத்தில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ‘ஹிமாலயன் ஹைஸ்' எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தனர்.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 ஸ்கூட்டர் மூலம், முதன் முதலாக அனாம் ஹாஷிம் என்ற ஒரு பெண் கர்துங் லா பாஸ் (Khardung La Pass) என்ற பகுதியை சென்று அடைந்தார்.

அறிமுகம்;

அறிமுகம்;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக், இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்து எடுக்கபட்ட ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை;

விலை;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ சாக்லேட் கோல்ட் எடிஷன் பைக், 49,234 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி தொடர்புடைய செய்திகள்

டிவிஎஸ் தொடர்புடைய செய்திகள்

டிவிஎஸ் ஸ்கூட்டி லிமிடெட் எடிஷன் ஸெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் விரைவில் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Chennai based TVS Motors has launched their TVS Star City+ ‘Chocolate Gold Edition’ recently. TVS Star City+ ‘Chocolate Gold Edition’ launched at a price of Rs 49,234 (ex-showroom, Delhi). New TVS Star City+ Chocolate Gold edition is combination of gold, brown and tan colours. It has gold-coloured alloy wheels. To know more, check here...
Story first published: Tuesday, May 17, 2016, 18:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark