டிவிஎஸ் விக்டர் பைக்-கை மறுபிரவேசம் செய்ய, டிவிஎஸ் நிறுவனம் திட்டம்

By Ravichandran

டிவிஎஸ் விக்டர் பைக்-கை மறுபிரவேசம் செய்வதற்கு டிவிஎஸ் நிறுவனம் திட்டம் செய்துள்ளது.

விரைவில் மறுபிரவேசம் செய்யபட உள்ள டிவிஎஸ் விக்டர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு புதிய தயாரிப்புகளை ஜனவரி 20, 2016 அன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

நுழைவு நிலை பைக்களும் மறுபிரவேசம்;

நுழைவு நிலை பைக்களும் மறுபிரவேசம்;

சென்னையை மையமாக கொண்டு இயங்கும் இரு சக்கர வாகன உற்பத்தியாளர், நுழைவு நிலை பைக்களையும் மறுபிரவேசம் செய்ய உள்ளது. விக்டர் கம்யூட்டர் பைக்கும் இந்திய சந்தைகளுக்கு மறுஅறிமுகம் செய்யபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016-ஆம் அண்டுக்காக வெளியிடப்பட புதிய விக்டர் பைக், 110 சிசி இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இந்த புதிய விக்டர் பைக், 110சிசி கம்யூட்டர் செக்மண்ட் பைக் வகையில் வெற்றிகரமாக போட்டியை எதிர்கொள்ளும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் நம்புகிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, விக்டர் மிக ஸ்பெஷல் பிராண்ட் ஆகும். இதற்கு காரணம், முதன்முதலாக இது தான் டிவிஎஸ் நிறுவனம் சார்பாக முழுமையாக வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுள்ள பைக் ஆகும்.

தற்போது கிடைக்கும் பைக்கள்;

தற்போது கிடைக்கும் பைக்கள்;

தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் மேக்ஸ் 4ஆர், ஸ்டார் சிட்டி 110, மற்றும் ஜைவ் உள்ளிட்ட கம்யூட்டர் பைக்களை வழங்கி வருகிறது.

இந்த விக்டர் பைக்கின் மறுபிரவேசம் சென்னையை மையமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது. இந்தியா பொருத்த வரை, 110 சிசி செக்மண்ட் அதிக விற்பனைக்கு வழிவகுக்கும் மிகப்பெரிய செக்மண்ட்-டாக விளங்குகிறது.

நவீன தொழில்நுட்பம்;

நவீன தொழில்நுட்பம்;

தொழில்நுட்பத்தை பொருத்த வரை, டிவிஎஸ் விக்டர் அனைத்து போட்டி நிறுவனங்களுக்கும் கடும் சவால் வழங்கும் வகையில் தான் உள்ளது.

மேம்பாடுகள் செய்யபடும் இந்த டிவிஎஸ் விக்டர், இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் மீண்டும் முன்னோடியாக விளங்க முயற்சிக்கும்.

கடும் போட்டி வழங்கும்;

கடும் போட்டி வழங்கும்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக மேம்பாடுகளுடன் மறுபிரவேசம் செய்யப்படும் டிவிஎஸ் விக்டர் பைக், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் பைக்களுக்கு கடும் போட்டியாக விளங்கும்.

புதிய அறிமுகம்;

புதிய அறிமுகம்;

இந்திய சந்தைகளுக்கும், சர்வதேச சந்தைகளுக்கும், டிவிஎஸ் நிறுவனம், புதிய அப்பாச்சி ரேன்ஜ் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக வேறு பல புதிய பைக்களும் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், டிவிஎஸ் மோட்டார்ஸ் தங்களின் முழுமையாக ஃபேரிங் செய்யபட்ட முதல் பைக்கையும் அறிமுகம் செய்யும் என வதந்திகள் வெளியாகிறது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
TVS Victor bike is expected to make a comeback on January 20, 2016. Apart from Victor, several new products are also expected to be introduced on the same January 20, 2016. The Victor is very special brand for TVS Motors, as it was very first product, which was built completely by themselves.
Story first published: Saturday, January 9, 2016, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X