டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Written By:

கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டமும், புனே நகரில் தீபாவளி பண்டிகை தந்த தித்திப்பின் சுவையையும் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும்போதே, கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்துவிட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கான சிறந்த இடங்களை தேர்வு செய்யும்போது, பழமையும், பாரம்பரிய பெருமையும் மிக்க கடவுளில் தேசமான கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் கொச்சியை தேர்வு செய்தோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

பரிசளிப்பு, பிரார்த்தனை, குடும்பத்தினர் ஒன்று கூடுவதற்கான உற்சாக தருணமாகவும் மாறிப் போன கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு கொச்சி நகரை அடைந்தவுடன் இரண்டு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள் எமது குழுவினரின் கைகளுக்கு கிடைத்தன. டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள் கிடைத்தவுடனே எமது குழுவினர் சுறுசுறுப்படைந்தனர்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

ஃபோர்ட் கொச்சி என்று குறிப்பிடப்படும் கொச்சி நகரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதுண்டு. போர்த்துகீசியர் விட்டுச் சென்ற பாரம்பரியமும், கட்டடக் கலையின் எச்சங்களையும் இங்கு பல்வேறு பகுதிகளில் காண முடியும். மேலும், பரபரப்பு மிகுந்த சாலைகளை கண்டு அயர்ந்து போன எமது குழுவினருக்கு, போக்குவரத்து பரபரப்பு இல்லாத, அமைதியான கொச்சி நகரின் சில சாலைகள் புதிய அனுபவத்தை வழங்குவதாக அமைந்தது. படத்தில் காணும் ஓல்டு ஹார்பர் ஓட்டலும் இதற்கு ஒரு சான்றாக படம் பிடித்து வழங்கியிருக்கிறோம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அரபிக் கடலின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் கொச்சி நகர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வர்த்தக நகரமாகவும் ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தது. கடந்த 1503ம் ஆண்டு வரை கொச்சிதான் முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. அதன் பின்னர் கோவா நகரமானது கொச்சியின் இடத்தை பிடித்துக் கொண்டது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

ஐரோப்பாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கொச்சி நகரில் ஏராளமான பழமைவாய்ந்த தேவாலயங்கள் அமைந்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த தேவாலங்களில் நடந்த ஏராளமான நள்ளிரவு திருப்பலி பூஜைகள் நடந்தன. அதில், கலந்து கொள்வதற்காக நள்ளிரவு நேரத்திலும் மக்கள் குடும்பத்துடன் தேவாலயங்களில் குழுமியிருந்தனர்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அதேபோன்று, அங்குள்ள வீடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வண்ண விளக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததுடன், உறவினர்கள், நண்பர்களின் வருகையால் பல வீடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டி இருந்தது. இந்த கொண்டாட்டமான தருணத்தை காண்பதற்கும், கடப்பதற்கும் எமது குழுவினருக்கு இரண்டு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள் பேருதவியாக இருந்தன. அருமையான வண்ணக் கலவை, அதிக எரிபொருள்சிக்கனம், செயல்திறன் மிக்க எஞ்சின் என எமது குழுவினரின் பயணத்தை மறுபுறம் சிறக்கச் செய்து கொண்டிருந்தது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கொச்சி நகரின் சாலைகளில் எளிதாக செல்வதற்கும், எமது குழுவினரின் நீண்ட நேர பயணத்தை களைப்பு இல்லாமலும் செல்வதற்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பானதாக இருந்தது. குறிப்பாக, முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு இருப்பது சொகுசு அதிகமாக தெரிந்தது. அத்துடன், சிறந்த கையாளுமையையும் வழங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே பரிசளிப்பு என்பதும் மிக முக்கிய விஷயம். அதற்கு தக்கவாறு, இருக்கைக்கு கீழே போதுமான இடவசதி இருந்தது. மேலும், எமது குழுவினரின் நீண்ட நேர பயணத்தின்போது மொபைல்போன் சார்ஜ் செய்வதற்கு ஏதுவாக மொபைல் சார்ஜர் வசதியையும் கொண்டுள்ளது டிவிஎஸ் வீகோ.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் கொச்சி நகர் வலத்தில் எமது குழுவினரை கவர்ந்த மற்றொரு விஷயம் படகு வீடுகள். ஆம், அங்குள்ள நீர் வழித்தடங்களில் சிறியதும், பெரியதுமாக இயக்கப்படும் படகுகள் அந்த பகுதியின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. மேலும், கேரளாவின் வர்த்தக தலைநகரமாக குறிப்பிடப்படும் கொச்சி நகரின் வருவாயில் சுற்றுலாத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த படகுகள் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் கடந்து செல்லும் அழகும், டிவிஎஸ் ஸ்கூட்டரில் செல்லும் சொகுசான பயணமும் ஒன்றாகவே தோன்றியது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அடுத்து கொச்சி நகரில் உள்ள மரைன் டிரைவ் பகுதியும் வெகு பிரபலம். உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இலக்காக மாறியிருக்கிறது. வர்த்தக நிறுவனங்களும், ஷாப்பிங் மால்களும், உணவு விடுதிகளும் அமைந்திருக்கும் இந்த பகுதியின் அழகை ரசிப்பதற்காக வருவோர் ஏராளம். அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களில் சில உணவு பதார்த்தங்களை எமது குழுவினர் ருசித்து, ரசித்தனர். அத்துடன், அங்கு ஷாப்பிங் செய்த பொருட்களையும், உணவுப் பொருட்களையும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட்டில் வைத்து அடக்கினர். நிச்சயமாக பைக்குகளில் இது பெரிய தலைவலியான விஷயமாக இருக்கும்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

அடுத்து கொச்சி நகரின் மிக முக்கிய பகுதியான சீன மீன் வலைகளை காண்பதற்கு எமது குழுவினர் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்றனர். இந்த பகுதி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. அரபிக் கடலை ஒட்டி அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சீன மீன் வலைகள் பாரம்பரிய மீன்பிடி கலையின் ஒரு அற்புதமாகவே பார்க்க முடிந்தது.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பெங்களூரில் மட்டுமே கண்டு ரசித்த எமது டிரைவ்ஸ்பார்க் குழுவினருக்கு இந்த முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதிய அனுபவத்தையும், உற்சாகத்தையும் தந்தது என்றால் மிகையில்லை. குறிப்பாக, டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள் தந்த சொகுசான, விரைவான பயணம் கொச்சி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சிறக்க உதவியது.

English summary
Exploring the charms and delights of Cochin during Christmas on a TVS Wego. Here #Wego exploring God's Own Country.
Story first published: Wednesday, December 28, 2016, 10:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more