மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

Written By:

நாட்டின் கலாச்சாரம் மிகுந்த நகரங்களில் பாரம்பரிய பண்டிகைகளை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் டிரைவ்ஸ்பார்க் டீம் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை புனே நகரில் இந்த ஆண்டு கொண்டாடியது குறித்த செய்தியின் முதல் அத்யாயத்தை ஏற்கனவே வழங்கியிருந்தோம்.

புனே நகரில் கசபா கணபதி கோயிலில் துவங்கி பார்வதி ஹில் வரை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்று, புனே நகரின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகளை பதிவு செய்திருந்தோம். அடுத்து தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடியது குறித்த செய்திப் பதிவை இங்கே காணலாம்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியின் வெளிப்பாடு கொண்டாட்டமாக மாறுகிறது. மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது அது பன்மடங்கு அதிகரிக்கிறது. கொண்டாட்டமாக மாறுகிறது. அந்த வகையில், எமது தீபாவளி கொண்டாட்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு, புனேயில் இருந்த எமது உள்ளூர் நண்பர்களுடன் தீவிர ஆலோசனையில் எமது குழுவினர் இறங்கினர். கடைசியாக, ஏழ்மையில் வாடுவோர்க்கும், பொருளாதாரத்தி்ல பின்தங்கிய பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் அங்குள்ள மாஹேர் ஆசிரமத்திற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் செல்ல முடிவு செய்தனர்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

ஏழ்மையால் பீடிக்கப்பட்டு தவித்தவர்களை முன்னேற்றும் விதத்தில், 1997ம் ஆண்டு மஹேர் ஆசிரமம் சகோதரி லூசி குரியன் என்பவரால் துவங்கப்பட்டது. கிராமங்கள் மற்றும் மோசமான வாழ்வியல் சூழலில் உழன்று வரும் பெண்கள், குழந்தைகளின் பிரச்னைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆரோக்கியமான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி வருகிறது.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

மஹேர் ஆசிரமத்திற்கு செல்வதற்கு முடிவு செய்தபின், அங்கு இருக்கும் குழந்தைகளுக்காக புனே நகரின் மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க சித்தலே பந்து மித்தாய்வாலே என்ற இனிப்பகத்துக்கு சென்றோம். அங்கு பகர்வாடி என்ற மராட்டிய பாரம்பரிய உணவுப் பொருளை வாங்கி டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டோம்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

ஆசிரமத்தில் இருக்கும் வயதானவர்களுக்காக, வழியில் இருந்த பழ வியாபாரியிடம் பழங்களை வாங்கி டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் எமது குழுவினர் நிரப்பிக் கொண்டனர். இனிப்பகத்தில் கொடுக்கப்பட்ட நொறுக்குத் தீணி அடங்கிய பெட்டிகள், பழங்கள் நிரப்பப்பட்ட பைகளுடன் நேராக ஆசிரமத்தை நோக்கி எமது குழுவினர் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் பயணித்தனர்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

பொதுவாக பைக்குகளில் செல்லும்போது இதுபோன்று பைகளையும், பெட்டிகளையும் எடுத்துச் செல்லும்போது எங்கே கீழே விழுந்துவிடும்போது என்ற ஒருவித அச்ச உணர்வு இருக்கும். அந்த உணர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், விரைவாகவும் ஆசிரமத்தை அடைந்தோம். மேலும், கூடுதல் உடைமைகளை எளிதாக வைப்பதற்கும், வெகு லாவகமாக செல்வதற்கும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் துணை நின்றது.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

வெள்ளை, சிவப்பு, நீலம் என மூன்று வண்ண டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் பரிசுகளுடன் சென்ற எங்களது குழுவினரை பார்த்து, ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள் ஆச்சரியமாக பார்த்து, குதூகலித்தனர். அடுத்து தொடர் கேள்விக் கணைகளையும் எங்கள் குழுவினரிடம் முன் வைத்தனர்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

எங்களது குழுவினரிடம் நீங்கள் யார்? எதற்காக வந்துள்ளீர்கள் என்ற தொடர் கேள்விகளால் துளைத்தெடுத்தனர் அங்கிருந்த குழந்தைகள். அவர்களது கேள்விகளுக்கு நிதானமாக பதில் தந்துவிட்டு நகர முனைந்த சமயத்தில், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்கள் பற்றிய கேள்விகளும் எங்களது குழுவினரை நோக்கி குழந்தைகள் முன் வைத்தனர்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சிறிய போட்டி ஒன்றும் நடந்தது. 20 கேள்விகளுக்கு பதில் செல்லும் வகையில் சிறுவர்கள், சிறுமிகள் தனித்தனியாக பிரிந்து ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு பதில் அளித்தனர். அதில், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் பற்றிய கேள்விகளும் அடக்கம். முடிவில் அவர்களுக்குள்ளாகவே கேள்வி-பதில்களுடன் விவாதம் துவங்கிவிட்டது.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

சிறுவர்கள் நீல வண்ண அணியாகவும், சிறுமிகள் சிவப்பு வண்ண அணியாகவும் பிரிந்து கேள்வி- பதில்களை விவாதித்தனர். எமது குழுவினர் சென்ற ஸ்கூட்டர்களின் வண்ணங்கள் குறித்த ஒரு சிறுவன் கேள்வி எழுப்ப, மறுமுனையில் சிறுமிகளிடமிருந்து பதில் பறந்தது. முடிவில் சிறுமிகள் அணி வெற்றியடைந்தது.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

ஒருபக்கம் மகிழ்ச்சி கரைபுரண்ட நிலையில், மறுபுறத்தில் அந்த குழந்தைகள் மனதில் சில விஷயங்களை விதைக்கவும் எமது குழுவினர் தவறவில்லை. ஆம், ஹெல்மெட் அணிவதன் கட்டாயம் குறித்தும், பாதுகாப்பாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவது குறித்தும் சில விஷயங்களை அங்கிருந்த சிறுவர்களிடம் எடுத்துக் கூறினோம். எதிர்காலத்தில் அவற்றை கடைபிடிக்கவும் கூறினர். அதற்கு, அனைவரும் கோரஸாக தலையை ஆட்டி ஆமோதித்தனர்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

ஆசிரமத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட பின்னர் அடுத்த பயண திட்டம் மனதில் உதித்தது. இதையடுத்து, அங்கிருந்த குழந்தைகளிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனால், மாஹேர் ஆசிரமத்தில் கண்ட சந்தோஷத்தை விட அவர்களது உண்மை நிலை பற்றி பல கேள்விகள் மனதில் எழுந்தது.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அன்றைய தின இரவு முழுவதும் அந்த குழந்தைகளின் நிலை, எதிர்காலம் போன்றவற்றை பற்றிய சிந்தனையில் எமது குழுவினருக்கு தூக்கமும் தூர விலகிச் சென்றது. இதுபற்றிய பேச்சிலேயே விடியற்காலை நேரம் நெருங்கியது. உடனடியாக, தீபாவளியின் முக்கிய நிகழ்வாக ஒளி உற்சவம் நடைபெறும் சரஸ்பாக் என்ற இடத்திற்கு எமது குழுவினர் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அங்கு சென்றவுடன் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புதிய வடிவில் காண முடிந்தது. அங்குள்ள ஏரிக்கரையில் அமைந்த பூங்கா ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். மேலும், கையில் இருந்த விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிய பலூன்கள் வானில் பறக்கவிட்டனர். அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

வான் நட்சத்திரங்கள் போல பறந்த ஆயிரக்கணக்கான பண்டிகை கொண்டாட்டத்தின் உன்னதத்தை வான் முட்ட பரைசாற்றிக் கொண்டிருந்தது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களுடன் மன நிறைவுடன் கொண்டாடி முடித்தது டிரைஸ்பார்க் டீம்.

மனதில் மகிழ்ச்சி ஒளி ஏற்றிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

கொல்கத்தாவில் துர்காபூஜை கொண்டாட்டத்தையும், புனே நகரில் தீபாவளி பண்டிகையையும் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் புண்ணியத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டது டிரைவ்ஸ்பார்க் டீம். அடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை கடவுளின் தேசமாக வர்ணிக்கப்படும் கேரளாவில் உள்ள கொச்சி நகரில் கொண்டாட இருக்கிறது டிரைவ்ஸ்பார்க் டீம்.

மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய செய்திகள்

கொல்கத்தா துர்காபூஜை கொண்டாட்டம் - பகுதி 1

கொல்கத்தா துர்காபூஜை கொண்டாட்டம் - பகுதி 2

புனே தீபாவளி கொண்டாட்டம் - பகுதி 1

English summary
Exploring the charms & delights of Pune during Diwali on a TVS Wego. How did #WeGo about it? Read on to find out - Part 2.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more